உறக்கமின்மையால் அவதியா? இவற்றையெல்லாம் உணவில் சேருங்கள்! ‘கொர்’ என்று தூங்குவீர்கள்!
உறக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளையெல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள். ‘கொர்’ என்று குப்புறப்படுத்து தூங்குவீர்கள்.
அமைதியான உறக்கமின்மைதான் பெரும்பாலான மக்கள் இன்று எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. இதனால் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் ஒரு உணவுப்பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்கு நன்றாக உறங்குவதற்கு உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் டிரிப்டோஃபான் உள்ளது. இது அமினோ அமிலம், செரோடோனின் மற்றும் மெலாடோனின் ஆகியவற்றின் உற்பத்திக்கு உதவுகிறது. இவையிரண்டுமே ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவக்கூடியவை.
செரி பழங்கள்
செரி பழங்களில் இயற்கையிலேயே மெலாடோனின் உள்ளது. இந்த ஹார்மோன்தான் உறங்குவதற்கும், விழிப்பதற்கும் உதவுகிறது. செரி பழங்கள் சாப்பிடுவது அல்லது செரி பழச்சாறு பருகுவது உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.
பாதாம்
பாதாம்களில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. அது தசைகளின் ஓய்வுக்கு உதவுகிறது. மனதில் அமைதியை நிலை நிறுத்த செய்கிறது. உடலில் மெக்னீசிய சத்து குறைந்தாலும் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.
வான்கோழி
வாழைப்பழங்களைப்போல் வான்கோழியிலும் டிரிப்டோஃபான் உள்ளது. இது செரோடோனின் மற்றும் மெலாடோனின் சுரக்க உதவுகிறது. இவ்விரு ஹார்மோன்களும் உறக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸில் அதிகளவில் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. அது இன்சுலீனை வெளியிடுகிறது. அது மூளையில் டிரிப்டோஃபான் உள்ளே செல்ல உதவுகிறது.
மீன்
சால்மன், டிரவுட், மெக்கரீல் போன்ற மீன்களில் அதிகளவில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கக் கூடியவை.
கிவி
கிவியில் செரோடோனின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது உறங்கும் முறையை முறைப்படுத்துகிறது. மேலும் தூக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கிறது.
வலேரியன் வேர்கள்
இதில் தேநீர் தயாரித்து பருகலாம். இது ஒரு மூலிகை. இது பல நூற்றாண்டுகளாக தூக்கத்துக்கும், ஓய்வுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
சூடான பால்
உறங்கச்செல்லும் முன் இளஞ்சூடான பால் பருக வேண்டும் என்பது நம்மிடம் பல காலமாக உள்ள பழக்கம். பாலில் உள்ள கால்சியம் மற்றும் டிரிப்டோஃபான் உறக்கத்தை அதிகரிப்பதுடன், அமைதியான சூழவை உருவாக்கி ஓய்வாக இருக்க வைக்கிறது.
கீரைகள்
அனைத்து வகை கீரைகளும் ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவுபவைதான். பாலக்கீரை, காலே போன்றவற்றில், கால்சியமும் அதிகம் உள்ளது. அது உடலுக்கு உதவுகிறது. மேலும் மூளை டிரிப்டோஃபானை செரோடோனின் ஆக மாற்ற உதவுகிறது. அது உறக்கம் மற்றும் ஓய்வுக்கு உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்