உங்கள் உடலில் உள்ள கொழுப்பை இயற்கையாக கரைக்க வேண்டுமா? உடனே சமையலறைக்கு செல்லுங்கள்!
Oct 18, 2024, 06:00 AM IST
உங்கள் உடலில் உள்ள கொழுப்பை இயற்கையாக கரைக்க வேண்டுமா? உடனே சமையலறைக்கு சென்று இந்த பொருட்கள் எல்லாம் உள்ளதா எனப்பாருங்கள். உங்கள் கொழுப்பு கரைந்துவிடும். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க நீங்கள் மாங்குமாங்கென உடற்பயிற்சிகள் செய்யவேண்டாம். அதற்கு பதில் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே அதற்கு உதவும். அவை என்னவென்று பாருங்கள். இவை உங்கள் கொழுப்பை குறைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. அதிக கொழுப்பு உங்கள் உடலில் எண்ணற்ற ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்தும். இது உங்கள் உடலில் அதிகரித்தால் உங்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும். நாம் எண்ணற்ற மசாலாப் பொருட்களை சமையலறையில் பயன்படுத்துகிறோம். அவை உங்கள் உணவின் சுவையை மட்டும் அதிகரிக்கவில்லை. உங்களின் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. நீங்கள் அன்றாட உணவில் சேர்க்கும் பொருட்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன மற்றும் அவை எப்படி உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கின்றன என்று பாருங்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த மசாலாக்கள் உங்கள் உணவின் சுவையை மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக அவை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள மசாலக்கள் உங்கள் உணவில் இயற்கை முறையில் கொழுப்பை குறைக்கின்றன.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூள் அதன் பிரகாசமான மஞ்சள் நிறத்திற்காக அதிகம் அறியப்படுகிறது. இதன் மஞ்சள் நிறம் மற்றும் சுவையும் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதில் குர்குமின் உள்ளது. இது உங்கள் உடலில் கொழுப்பு அளவைக் குறைகக் உதவுகிறது. இது குறைவான அடர்த்தி கொண்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்புகள்தான் தமனிகளில் சேர்ந்துகொண்டு உங்கள் உடலுக்கு எண்ணற்ற தீமைகளை செய்கிறது.
பூண்டு
பூண்டு, பாரம்பரிய மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் உடலில் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அலிசின் உள்ளது. அந்த சல்ஃபர் உட்பொருள், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உங்கள் உடலில் அதிக அடர்த்தியான நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
பட்டை
பட்டை, உங்கள் இனிப்புகள் மற்றும் பானங்களுக்கு மட்டும் சுவையைக் கொடுப்பதில்லை. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. பட்டை, உங்கள் உடலில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவைக் குறைக்கிறது. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பு ஆகும்.
வெந்தயம்
வெந்தயம் இந்திய சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கொழுப்பை உடல் உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் உங்கள் வயிற்றில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான மண்டலத்தில் உள்ள கொழுப்பை ஒன்றிணைத்து, உங்கள் உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
இஞ்சி
இஞ்சி, சோர்வு மற்றும் மயக்கத்தைப் போக்கும் ஒரு பொருள் ஆகும். இது கொழுப்பை பராமரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசராய்ட்கள் உங்கள் இதயத்தில் வியாதிகள் ஏற்பட காரணமாகின்றன.
மிளகு
மிளகில் பைப்ரைன் உள்ளது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. இதன் கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்ற மசாலாக்களை விட குறைவுதான், என்றாலும், இது உடலில் மற்ற நற்குணங்கள் நன்றாக உறிஞ்ச உதவுகிறது. இது மஞ்சளில் உள்ள குர்குமினைப்போன்றது.
மல்லி விதைகள்
மல்லி விதைகள் சமையலில் அதிகளவிலும், அடிக்கடியும் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான கொழுப்பை குறைக்கும் குணங்களுக்காக இது உடல் எடையை குறைப்பதிலும், உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க வருகிறது. அது இதை இதயத்துக்கு நெருக்கமான ஒரு மசாலாவாக மாற்றுகிறது.
துளசி
துளசி எண்ணற்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மூலிகைச் செடியாகும். இவை உணவின் சுவையை மட்டும் அதிகரிக்க உதவவில்லை. இதில் உள்ள ஈஜினால் என்ற உட்பொருள் உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பை குறைத்து, ஹெச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்கள் என்பதை ரத்தத்தில் கலக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.