வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டின் போது கட்டாயம் வைக்க வேண்டிய நைவேத்திய பொருள்! இந்த ஒரு பொருளுக்கு இத்தனை சக்தியா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டின் போது கட்டாயம் வைக்க வேண்டிய நைவேத்திய பொருள்! இந்த ஒரு பொருளுக்கு இத்தனை சக்தியா!

வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டின் போது கட்டாயம் வைக்க வேண்டிய நைவேத்திய பொருள்! இந்த ஒரு பொருளுக்கு இத்தனை சக்தியா!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 16, 2024 08:57 AM IST

வீட்டில் செவ்வம் சேர, பணமழை பெற குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை.

வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டின் போது கட்டாயம் வைக்க வேண்டிய நைவேத்திய பொருள்! இந்த ஒரு பொருளுக்கு இத்தனை சக்தியா!
வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டின் போது கட்டாயம் வைக்க வேண்டிய நைவேத்திய பொருள்! இந்த ஒரு பொருளுக்கு இத்தனை சக்தியா!

குபேர வழிபாட்டில் முக்கியம்

வீட்டில் செவ்வம் சேர, பணமழை பெற குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை. பொதுவாக குபேரர் ஒரு நாணய பிரியர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இதனால் குபேரரை வழிபடும் போது நாம் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது குபேர வழிபாடுகளில் மிக முக்கியமானது ஆகும்.

கிருஷ்ணனுக்கு தவறாது வெண்ணெய் படைத்து வழிபடுபவர்களுக்கு, கிருஷ்ண பரமாத்மா பரிபூரணமாக அருள் புரிவதாக ஐதீகம் உண்டு. மகாலட்சுமிக்கு வெண்தாமரை மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து தவறாது வழிபட்டு வருபவர்களுக்கு 16 செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. அது போல இந்த ஒரு நைவேத்திய பொருள் குபேரருக்கு ரொம்பவும் இஷ்டமானதாக விளங்குகின்றது.

இந்து சமயத்தில் பசு புனிதமான உயிரினமாக பார்க்கப்படுகிறது. பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் போன்ற அத்தனை பொருட்களும் தெய்வாம்சம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் ரொம்பவும் விசேஷமான ஒரு பொருள் ‘தயிர்’. தயிரை நைவேத்தியமாக படைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும், அவற்றை நீக்கி தயிர் போன்ற ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்.

குபேரனுக்கு உகந்த பொருள்

குபேரருக்கு உகந்த பொருட்களுள் ஒன்று தயிர்! தயிரை படைத்து குபேர வழிபாடு செய்பவர்களுக்கு வீட்டில் பணமழை பெய்யும். பொன்னும், பொருளும், மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டே செல்லும். ‘தயிர்’ குபேரனுக்கு மட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கும் இஷ்டமான ஒரு பொருளாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி குபேரருக்கு ஒரு கப் தயிரை மண் சட்டியில் நைவேத்தியம் படைத்து மனம் உருகி வழிபாடு செய்வது மிகவும் நல்ல பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

வியாழன் கிழமை தோறும் குபேரருக்கு ஒரு கப் தயிர் வைத்து வழிபாடு செய்து வர வீட்டில் செல்வம் சேரும். பௌர்ணமி தோறும் தயிர் தானம் செய்து வருபவர்களுக்கும் பணக்கஷ்டம் தீரும் என்பது ஐதீகம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner