கண் பார்வையைக் கூராக்க வேண்டுமா? இந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலே போதும்!
Dec 07, 2024, 08:54 AM IST
கண் பார்வையைக் கூராக்கும் பழக்க வழக்கங்கள் என்ன?
கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகள் என்னவென்று பாருங்கள். உங்கள் கண்களை பாதுகாக்கும் பழக்கங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஆரோக்கியமான கண்கள் இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிப்படும். நீங்கள் சில பழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்வில் செய்யும்போது, அது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். நீங்கள் இந்த பழக்கங்களை தினமும் செய்யும்போது அது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிது. உங்களின் பார்வையை நீண்ட காலம் நல்ல முறையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்
உங்கள் உணவில் வைட்டமின் ஏ, சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கேரட், கீரைகள் மற்றும் மீன் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொண்டால், அது உங்களின் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
20-20-20 விதியை பின்பற்றுங்கள்
நீங்கள் அதிக நேரம் திரையை பார்ப்பதால், உங்கள் கண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் போக்க, நீங்கள் 20-20-20 விதியை பின்பற்றுங்கள். ஒவ்வொரு 20 நிமிடமும் 20 நொடிகள் நீங்கள் 20 அடியில் உள்ள வேறு ஏதேனும் பொருளை உற்றுப்பார்க்கவேண்டும்.
குளிர் கண்ணாடிகள்
உங்கள் கண்களுக்கு பாதுகாப்பைக் கொடுங்கள், கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புறஊதாக் கதிர்களை அது 100 சதவீதம் காக்கிறது. சேதத்தைக் குறைத்து, நாள்பட்ட கண் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
வழக்கமான கண் பரிசோதனைகள்
உங்கள் கண் மருத்துவரை குறிப்பிட்ட காலகட்ட இடைவெளியில் நீங்கள் சென்று சந்தித்து, உங்களுக்கு கண்புரை, கிளக்கோமா மற்றும் வயோதிகத்தால் ஏற்படும் கண் பார்வையிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறதா என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியம் குறைந்த அளவு பாதுகாக்கப்படும்.
திரை நேரத்தை குறைக்க வேண்டும்
உங்கள் திரை நேரத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நீண்ட காலம் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான கண் பார்வையைத் தருகிறது.
போதிய உறக்கம்
நீங்கள் போதிய அளவு உறங்கவேண்டும். அது உங்கள் கண்களில் ஏற்படும் சோர்வைப் போக்கும். உங்கள் கவனத்தை மேம்படுத்தும், உங்கள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்துக்கும் உதவும். இது உங்களின் கண்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
நீர்ச்சத்துடன் இருங்கள்
அதிகளவில் தண்ணீர் பருகுவது உங்கள் உடல் நலனுக்கு சிறந்தது. உங்கள் கண்களுக்கு போதிய நீர்ச்சத்துக்களை கொடுங்கள். கண்களில் வறட்சியைப் போக்குங்கள், கண்களில் எரிச்சல் மற்றும் அசவுகர்யங்களைப் போக்க நீங்கள் நல்ல நீர்ச்சத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது உங்கள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியம் மற்றும் நீர்ச்சத்தை காக்க உதவும்.
உடல் எடை
அதிக உடல் எடை, உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும். இது நீரிழிவு ரெட்டினோபதி ஏற்பட வழிவகுக்கும். மேலும் பல கண் கோளாறுகளையும் ஏற்படுத்தும். எனவே நீங்கள் ஆரோக்கியமான கண் பராமரிப்புக்கு, ஆரோக்கியமான எடையும் அவசியம். எனவே இவற்றை பின்பற்றினாலே உங்கள் கண் பார்வை கூராகும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்