தினமும் 50 மில்லி லிட்டர் போதும்! நெல்லிக்காய் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் 50 மில்லி லிட்டர் போதும்! நெல்லிக்காய் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் 50 மில்லி லிட்டர் போதும்! நெல்லிக்காய் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Dec 07, 2024 05:50 AM IST

தினமும் நெல்லிக்காய்ச் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் 50 மில்லி லிட்டர் போதும்! நெல்லிக்காய் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தினமும் 50 மில்லி லிட்டர் போதும்! நெல்லிக்காய் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

நெல்லிச்சாறில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தினமும் 50 மில்லி லிட்டர் நெல்லிச்சாறு பருகினால், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி இயற்கை பாதுகாப்பைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு நோய் தொற்றுகள் மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிச்சாறு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்களுக்கு தேவையான செரிமான சாறுகள் மற்றும் எண்சைம்களை சுரக்கச் செய்கிறது. இது உங்களின் மலத்தை இலகுவாக்கி, மலச்சிக்கலைப் போக்குகிறது. வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது, அசிடிட்டியைப் போக்குகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்தைக் காக்க சிறந்த பானமாகிறது.

சரும பளபளப்பு

நெல்லிக்காய்ச் சாறு உங்கள் சருமத்துக்கு இயற்கை பொலிவைத் தருகிறது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் செல்களின் சேததை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை அடித்து விரட்டி, உங்களுக்கு இளமை தோற்றத்தைக் கொடுக்கிறது. எனவே நீங்கள் அன்றாடம் நெல்லிக்காய் சாறு பருகுவது, கரும்புள்ளிகளைக் குறைக்கிறது, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது மற்றும் வயோதிகத்தை குறைக்கிறது.

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் தலைமுடியை வலுப்படுத்தி, அதற்கு பொலிவைத்தருகிறது. இது தலைமுடி உதிர்வு, பொடுகு மற்றும் இளமையில் நரைமுடி போன்ற பிரச்னைகளைத் தடுத்து, உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகிறது.

உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

நெல்லிக்காய் சாறு ஒரு சக்தி வாய்ந்த கழிவு நீக்கியாக செயல்படுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடலில் உள்ள கழிவுகளை நன்றாக வெளியேற்ற உதவுகிறது. இந்த இயற்கை கழிவு நீக்க பானம், உங்கள் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் உதவி, உங்களை புத்துணச்சியுடன் வைத்துக்கொள்கிறது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

நெல்லிக்காய் சாறு, தங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு. இது ரத்தத்தில் சர்க்கரை அளலை முறைப்படுத்துகிறது. இது இன்சுலின் சென்டிவிட்டியை அதிகரிக்கிறது. உடல் சர்க்கரையை உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் அதிகம் சர்க்கரை உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.

உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது

தினமும் நெல்லிச்சாறு பருகுவது உங்கள் உடலின் வளர்சிதைக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்களின் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சுகிறது. இது உங்கள் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. இது உங்கள் உடல் கலோரிகளை நன்முறையில் எரிக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

உடலில் உள்ள கொழுப்புக்களை குறைத்து, ரத்த அழுத்தத்தையும் குறைத்து, நெல்லிக்காய் உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால் உங்களுக்கு இதய நோய்கள் எற்படும் ஆபத்து தடுக்கப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

நெல்லிச்சாற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும், குறிப்பாக இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. எனவே நெல்லிச்சாறை தொடர்ந்து சாப்பிடுவது, உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது, உங்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. மனத்தெளிவை ஏற்படுத்துகிறது. மனஅழுத்த அளவைக் குறைக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

நெல்லிச்சாறு உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கல்லீரல் செல்களை மீட்டுருவாக்கம் செய்கிறது. அதன் திறனை அதிகரிக்கிறது. செல்கள், நச்சுக்களால் சேதமடைவதைத் தடுக்கிறது. குறிப்பாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.