Omega 3 Fatty Acid Rich Foods : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!
Omega 3 Fatty Acid Rich Foods : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
ஃப்ளாக்ஸ் விதைகள்
ஃப்ளாக்ஸ் சிட்ஸ் எனப்படும் ஆளி விதைகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. நாளொன்றுக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸ் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளும்போது இது உங்கள் உடலுக்கு உதவுகிறது.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதில் அதிகளவில் மாங்கனீஸ், நார்ச்சத்துக்கள் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளது.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது மிதமான அளவு சேர்த்துக்கொள்ளும்போது, உங்கள் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பீன்ஸ்
அனைத்து வகை பீன்ஸ்களிலும், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு சிறப்பான தேர்வு ஆகும். எனவே இவற்றை உங்கள் உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்.
தண்ணீர் காய்கறிகள்
தண்ணீர் காய்கறிகளில் குறிப்பிட்ட அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதை சூப், கிரேவி என எதுவேண்டுமானாலும் செய்து சாப்பிட்டு உங்கள் ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
கீரைகள்
கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைய உள்ளது. ப்ராக்கோலி, கீரைகள் ஆகியவை உங்களுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்களை வழங்கக்கூடியவை. எனவே இவற்றை அன்றாட உணவில் சேர்த்து உங்கள் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
பெரிகள்
பெரிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இதில் தேவையான மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைய உள்ளது. இதை ஸ்மூத்திகள் செய்து அல்லது, சாலட்களில் கலந்து, ஸ்னாக்சாக சாப்பிட்டு மகிழலாம்.
வால்நட்கள்
வால்நட்களில், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருக்கும். இதை காலை நேர ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கக்கூடியது.
கிர்ணி மற்றும் மாம்பழம்
கிர்ணிப்பழம் மற்றும் மாம்பழத்தில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. இதில் ஒமேகா 6 குறைவான அளவு உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
முட்டைக்கோஸ் மற்றும் காளிஃபிளவர்
முட்டைக்கோஸ், காளிபிஃவர் மற்றும் ப்ரோகோலியில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்