தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vathal Kulambu : பார்த்தாலே எச்சில் ஊறும் தரமான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு.. ஒரு வாரமானாலும் கெட்டாது!

Vathal Kulambu : பார்த்தாலே எச்சில் ஊறும் தரமான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு.. ஒரு வாரமானாலும் கெட்டாது!

Sep 05, 2024, 04:10 PM IST

google News
Vathal Kulambu : பக்குவமாக தயாரிக்கும் இந்த வத்த குழம்பை ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த வத்தல் குழம்புக்கு ஒரு அப்பளம் இருந்தாலே போதும். ஒரு தட்டு சோறு கூட சாப்பிடலாம். ருசி அத்தனை அருமையாக இருக்கும். அந்த ருசியில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்
Vathal Kulambu : பக்குவமாக தயாரிக்கும் இந்த வத்த குழம்பை ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த வத்தல் குழம்புக்கு ஒரு அப்பளம் இருந்தாலே போதும். ஒரு தட்டு சோறு கூட சாப்பிடலாம். ருசி அத்தனை அருமையாக இருக்கும். அந்த ருசியில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்

Vathal Kulambu : பக்குவமாக தயாரிக்கும் இந்த வத்த குழம்பை ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த வத்தல் குழம்புக்கு ஒரு அப்பளம் இருந்தாலே போதும். ஒரு தட்டு சோறு கூட சாப்பிடலாம். ருசி அத்தனை அருமையாக இருக்கும். அந்த ருசியில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்

Vathal Kulambu : நாம் வீடுகளில் அடிக்கடி வத்தல் குழம்பு செய்கிறோம். ஆனாலும் கல்யாண வீட்டில் வைக்கும் வத்தல் குழம்பு எப்போதும் ஒரு பிரத்தேகமான ருசியில் இருக்கிறது. அதேபோல் கல்யாண வீட்டில் செய்யப்படும் வத்தல் குழம்பில் தேங்காய் சேர்க்கின்றனர். ஆனாலும் அது சீக்கிரமாக கெட்டுப்போகாமல் இருக்கும். அதற்கு சின்ன டெக்னிக்கை நாம் பாலோ செய்தால் போதும். அப்படி பக்குவமாக தயாரிக்கும் இந்த வத்த குழம்பை ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த வத்தல் குழம்புக்கு ஒரு அப்பளம் இருந்தாலே போதும். ஒரு தட்டு சோறு கூட சாப்பிடலாம். ருசி அத்தனை அருமையாக இருக்கும். அந்த ருசியில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

சுண்ட வத்தல் - 100 கிராம்

பூண்டு -100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

தக்காளி - 2

புளி - 50 கிராம்

நல்லெண்ணெய்

பெருங்காயம் - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை

உப்பு

கொத்தமல்லி விதை - 50 கிராம்

வரமிளகாய் - 25 கிராம்

வெந்தயம் - 5 கிராம்

மிளகு - 5 கிராம்

துவரம் பருப்பு -1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

பச்சரிசி - 1 ஸ்பூன்

தேங்காய் - அரை முடி

வத்தல் பொடி - 2 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

வத்தல் குழம்பு செய்முறை

சூடான கடாயில் பச்சரிசை, மல்லி, வரமிளகாய், கடுகு அரை ஸ்பூன், வெந்தயம், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு, பெருங்காய தூள் போன்ற பொருட்களை மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து வறுக்க வேண்டும். அதில் கடைசியாக வெந்தயத்தை சேர்க்க வேண்டும். வெந்தயம் லேசாக பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது வறுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். 

பொடியை நைசாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் 6 மாதத்திற்கு கூட கெட்டு போகாது.

இப்போது குழம்பு வைக்க ஆரம்பிக்கும் முன் தேங்காயில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு , வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் சுண்ட வத்தல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்போது கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதில் அரை ஸ்பூன் மிளகாய் தூளை சேர்க்க வேண்டும். அரைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். தேங்காயில் இருக்கும் தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது 50 கிராம் புளியை கரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். குழம்புக்கு தேவையான உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். குழம்பு நன்றாக கொதித்து கெட்டியான பதத்திற்கு வரும் போது ஏற்கனவே அரைத்த வத்தல் குழம்பு பொடியில் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம். நாம் தயாரித்த அளவு பொடியில் இதே அளவு வெங்காயம், பூண்டு சேர்த்தால் இரண்டு முறை குழம்பு தயாரிக்கலாம். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடலாம்.

குறிப்பு: குழம்பு ரெடியாகிய பின்னர் கடைசியாக பச்சை நல்லெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அது குழம்பிற்கு நல்ல ருசி தரும். வெல்லம் சேர்க்க விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம். 4 நாட்கள் வரை இந்த குழம்பு வெளியில் இருந்தாலும் கெடாது. பிரிட்ஜில் வைத்தால் 10 நாள் ஆனாலும் கெடாது . தேவையான போது சூடாக்கி பயன்படுத்தலாம்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி