Benefits of Eating Jaggery after Meals : ஒரு பிடி சோறு; ஒரு கடி வெல்லம்! உங்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?
- Benefits of Eating Jaggery after Meals : ஒரு பிடி சோறு; ஒரு கடி வெல்லம்! உங்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?
- Benefits of Eating Jaggery after Meals : ஒரு பிடி சோறு; ஒரு கடி வெல்லம்! உங்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?
(1 / 14)
உங்கள் மூதாதையர்களை கேட்டால் தெரியும், அவர்கள் சாப்பிட்டவுடன் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் என்பது. ஆனால் நாம் இந்த நல்ல பழக்கத்தை இப்போது பின்பற்றுவதில்லை. உங்களுக்கு தெரியுமா சாப்பிட்டபின் ஒரு துண்டு வெல்லத்தை கடித்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று? இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 14)
செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறதுவெல்லம் செரிமான மண்டலத்தின் எண்சைம்களை தூண்டுகிறது. இது உணவை உடைக்க உதவி செய்கிறது. நன்றாக உடைக்கப்பட்ட உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. இதனால் வயிறு உப்புசம் மற்றும் செரிமானமின்மை போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
(3 / 14)
இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததுவெல்லத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. இது நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.
(4 / 14)
உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறதுசாப்பிட்டபின் வெல்லம் சாப்பிடுவது உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. இதனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து வெளியேறும் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது நீங்கள் ஆரோக்கியமான எடையை எட்டுவதற்கு உதவி, உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது.
(5 / 14)
உடலை சுத்தப்படுத்துகிறதுசெல்லம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உங்களின் கல்லீரலை சுத்தம் செய்து, அதில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதை உட்கொள்வதை நீங்கள் வழக்கமாகக் கொண்டால், அது உங்கள் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
(6 / 14)
அனீமியாவைத் தடுக்கிறதுவெல்லத்தில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உங்களுக்கு அனீமியா ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அனீமியா உங்களுக்கு இருந்தால், அதனால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளில் அனீமியாவைப் போக்குகிறது.
(7 / 14)
நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்குகிறதுவெல்லத்தில் உள்ள இயற்கையான மலமிலக்கும் தன்மை, உங்கள் உடலில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குகிறது. உங்கள் உடலில் இருந்து மலத்தை விரைவில் வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கத்தை தூண்ட உதவி, நீங்கள் வழக்கமாக மலம் கழிக்க உதவுகிறது.
(8 / 14)
ஆற்றல் மையம்வெல்லம் உங்களுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கக் கூடியது. இதில் அதிகளவில் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் போலன்றி இது உடலில் ஆற்றலை மெல்ல மெல்ல வெளியேற்றுகிறது. இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கிறது. அதனால் ஏற்படும் சேதத்தையும் போக்குகிறது.
(9 / 14)
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறதுவெல்லத்தில் முக்கிய மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. வெல்லம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இது நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உங்களுக்கு உதவுகிறது. சளி, இருமல் காய்ச்சலையும் போக்குகிறது.
(10 / 14)
சுவாசக்கோளாறுகளை சரிசெய்கிறதுசுவாச மண்டத்தில் சேரும் சளியை போக்கி, உங்கள் சுவாச அமைப்பை சீராக்க வெல்லம் உதவுகிறது. இது குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. சுவாசம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்கிறது.
(11 / 14)
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறதுவெல்லத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கிளைக்கோலிக் அமிலம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெல்லம் உட்கொள்வதை நீங்கள் வழக்கமாகக் கொண்டால், அது உங்களுக்கு தெளிவான சருமத்தைக் கொடுக்கிறது. மேலும் சருமத்தில் பளபளப்பு மற்றும் பொலிவும் ஏற்படுகிறது.
(12 / 14)
உடலில் எலக்ட்ரோலைட்களை சமம்படுத்துகிறதுவெல்லத்தில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள், உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்களை சமப்படுத்த உதவுகிறது. தண்ணீரை உடலில் தக்கவைக்கிறது. அது வயிறு உப்புசம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
(13 / 14)
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதுவெல்லத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இது இதய தமனிகளில் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கிறது.
மற்ற கேலரிக்கள்