Massage Benefits : நல்லெண்ணெய் மசாஜ் செய்து குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்.. நரம்பு மண்டல அமைதி முதல் தூக்கம் வரை!
Sesame Oil Massage Benefits : எள் எண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை வழங்க உதவுகின்றன. இது குளிக்கும் போது தோலின் மேற்பரப்பைப் பாதுகாக்கிறது. ஈரப்பதம் மற்றும் வறட்சியைத் தடுக்கிறது.

Sesame Oil Massage Benefits : நல்லெண்ணெய் நம் உடலுக்கு மிகவும் நல்லது. உணவாகவும் அழகு பராமரிப்பு பொருளாகவும் நல்லெண்ணெய் பார்க்கப்படுகிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை பலரும் அப்படியே பயன்படுத்துகின்றனர். உளுந்தம்பொடி போன்ற உணவுகளுக்கு அல்டிமேட் டேஸ்ட் கொடுக்கவல்லது. சிலர் தீபாவளி பண்டிகைகள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற ஓய்வு நாட்கள்வந்தால் வீட்டில் எள் எண்ணெய் தேய்த்து மசாஜ் குளிப்பார்கள்.
சமீபகாலமாக அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் இந்த வழக்கம் கண்டிப்பாக பின்பற்றப்பட்டது. ஏனெனில் இந்த வகை குளியலில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. குளிப்பதற்கு முன் சிறிது எள் எண்ணெயைத் தடவி, வெந்நீரில் குளித்து உடல் வெப்பநிலையை சமன் செய்ய வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ உண்மை.
எள் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் தோல் பராமரிப்பு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து விட்டு குளிப்பதுதென்னிந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிப்பது பலரது வழக்கம். இந்த தனித்துவமான எண்ணெய் குளியலின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.