தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அன்றாட உணவுக்கு அத்யாவசியமான தக்காளி! வீட்டிலேயே செடிகளை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்!

அன்றாட உணவுக்கு அத்யாவசியமான தக்காளி! வீட்டிலேயே செடிகளை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 09, 2024, 05:37 AM IST

google News
அன்றாட உணவுக்கு அத்யாவசியமான தக்காளிச் செடியை நீங்கள் வீட்டிலேயே வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.
அன்றாட உணவுக்கு அத்யாவசியமான தக்காளிச் செடியை நீங்கள் வீட்டிலேயே வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

அன்றாட உணவுக்கு அத்யாவசியமான தக்காளிச் செடியை நீங்கள் வீட்டிலேயே வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

நீங்கள் வீட்டிலேயே தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டவரா? தக்காளிச் செடிகளை வளர்த்து பலன்பெறவேண்டுமா? உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவற்றை எப்படி வளர்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள். தக்காளி உங்கள் சரிவிகித உணவுக்கு கட்டாயம் தேவையான ஒன்று. அதுவும் நீங்கள் வீட்டிலே வளர்த்த ஆர்கானிக் தக்காளி என்றால் அது உடலுக்கு நல்லது, அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிச்சயம் இருக்கும். வீட்டிலேயே வளர்ப்பதில் சுவையும், ஃபிரஷ்னசும் இருக்கும். இது உங்கள உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும். இதை நீங்கள் பல்வேறு உணவுகளிலும் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம். இதை நீங்கள் சாஸ், சாலட்கள் மற்றும் சாம்பார், ரசம் என தயாரிக்கப் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் பல்வேறு வெப்பநிலைகளில் பல்வேறு வகை தக்காளிகள் வளர்க்கப்படுகின்றன. வீட்டிலேயே வளர்க்கப்படும் தக்காளிகள் உங்கள் உணவுக்கு ஊட்டச்சத்தை தருகின்றன. உணவின் சுவை மற்றும் தரத்தையும் அதிகரிக்கின்றன. தக்காளிச் செடிகள் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படும் ஒன்றாகும். இதை நீங்கள் வீட்டிலேயே வளர்க்க என்ன செய்யவேண்டும் பாருங்கள்.

தொட்டி

20 இன்ச் வட்டமான மற்றும் 18 முதல் 24 இன்ச் ஆழமுள்ள தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இது சில நோய் தொற்றுகள் செடிகளுக்கு ஏற்படாமல் தடுக்கும். ஒரு தொட்டிக்கு ஒரு செடி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

தொட்டிகளை அதிகம் சூரியஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவேண்டும். வெப்பநிலை 24 டிகிரி முதல் 26 டிகிரி வரை இருக்கும்போது, தொட்டியை வெளியில் வைக்கவேண்டும்.

கோடையில் மண்ணின் ஈரப்பதம் குறைந்து, தக்காளியில் உள்ள நீரையும் வற்றவைத்துவிடும்.

ஒரு நாளில் ஒருமுறை கட்டாயம் தக்காளி செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டும். அப்போதுதான் மண்ணின் மேல்புறம் ஈரமாக இருக்கும். தக்காளி செடிகளுக்கு மண்ணின் மேல்புற ஈரம் கட்டாயம் தேவை. வேர் அழுகிவிடாமல் இருக்க தொட்டியி தேவையான வடிகால் வசதி இருக்கவேடுண்டும்.

அதிக தக்காளிகள் வரவேண்டும் என்றால் இயற்கை உரங்கள் பயன்படுத்துங்கள்.

சிறிய தொட்டியில் இருந்து பெரிய தொட்டிக்கு செடிகளை மாற்றவேண்டும். வடிகால் உள்ள, நல்ல மண்ணும், உரமும் கலந்த தொட்டிக்கு மாற்றுங்கள்.

ஆரோக்கியமான செடிகளை வெளியில் நடுங்கள். ஆரோக்கியமான தண்டுகள் தக்காளிச் செடியில் வளரவேண்டுமெனில், கிளைகளும் விடவேண்டுமென்றால், செடியின் அடிப்புறத்தில் உள்ள கிளைகளை கிள்ளவேண்டும்.

புதிய செடிகள் முதலில் அவற்றின் வேரில் இருந்து வளரவேண்டும். பின்னர் அவற்றை கிள்ளி வைக்கவேண்டும். தண்டில் இருந்து செடிகளை வெட்டக்கூடாது.

ஈரமான புதிய தொட்டியில் தக்காளி விதைகளை இடவேண்டும். அந்தத் தொட்டியில் மண் நிறைந்திருக்கவேண்டும். தண்டின் சிறுபகுதி வெளியில் தெரியவேண்டும். நீங்கள் செடிகளை நட்டுவைத்தால், மீண்டும் நடும்போது, மூன்றில் இரண்டு பங்கு செடியை மண்ணில் நட்டு வைக்கவேண்டும். இது உங்கள் செடி வலுவாக வளரவும், நல்ல விளைச்சலைக் கொடுக்கவும் உதவும்.

தண்ணீர் தேவையான அளவு விட்டு, மேல்புறத்தில் உள்ள மண்ணை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடுங்கள்.

உரம்

நமக்கும் சுவையான மற்றும் தரமான காய்கறிகள் கிடைக்கவேண்டுமென்றால், அதற்கு நீங்கள் தண்ணீர் அதிகம் விடவேண்டும். ஊட்டச்சத்துக்களும் செடிகளுக்கு அதிகம் கிடைக்கவேண்டும். அதற்கு நெட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய உரங்கள் தக்காளி செடிகளுக்கு தேவை. காய்ந்த இலைகள், முட்டை ஓடுகள், மரச்சாம்பல், காபி கொட்டைகள், வீணான உணவுகள், எப்சம் உப்பு மற்றும் உரம் ஆகியவற்றை வைத்து தண்ணீர் சேர்த்து தக்காளி செடிகளுக்கான உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தக்காளி செடிகள்

தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை நேரடி சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் தக்காளிச் செடியை வைக்கவேண்டும். நீங்கள் தோட்டத்தில் வளர்த்தாலும் அல்லது தொட்டியில் வளர்த்தாலும் இந்த அளவுக்கு வெளிச்சம் தேவை.

வளரும் பருவத்தில் இருமுறை இயற்கை உரம் இடவேண்டும். நட்டவுடனும், பழம் பழுத்தவுடனும். இது வளர்ச்சியை ஓரளவு உறுதிப்படுத்தும்.

செடிகள் வெயிலால் காய துவங்கினால், தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாகக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தாவரங்கள் தொடர்ந்து மண்ணில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும். நேரடியாக வேருக்கு தண்ணீர் ஊற்ற கேன்களை பயன்படுத்தவேண்டும் அல்லது சொட்டு நீர் பாசனத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்.

தக்காளி செடிகளை வெட்டி வளர்க்கவேண்டும். அருகில் தோன்றும் கிளைகளையும், களைகளையும் அகற்றவேண்டும். முக்கிய தண்டு மற்றும் கிளைகளுக்கு இடையில் உள்ள செடிகளை களைய வேண்டும்.

தண்ணீரில் எப்போதும் சமஅளவு ஈரப்பதம் இருக்கவேண்டும். அது களைகள் வளர்வதை தடுக்கும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி