கரும்புள்ளிகள், கருவளையங்கள், முகப்பருக்கள், சுருக்கங்களுக்கு நிரந்தர தீர்வு! ஃபேஸ் மாஸ்க், ஸ்கிரப்! வீட்டிலே செய்யலாம்!
Oct 08, 2024, 04:23 PM IST
முகத்தில் கரும்புள்ளிகள், கண் கருவளையங்கள், முகப்பருக்கள், சுருக்கங்களுக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை வழிகள்!
உங்கள் வீட்டிலேயே கரும்புள்ளிகள், கருவளையங்கள், முகப்பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்க நிரந்தர தீர்வு உண்டு. ஒவ்வொருவருக்கும் பொலிவான சருமம் பெறவேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். உங்கள் சரும ஆரோக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் காரணமாகிறது. வயோதிம், வாழ்க்கை முறை மற்றும் மாசு காரணமாக உங்களுக்கு சருமத்தில் சுருக்கம், முகப்பருக்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் என ஏற்பட வாய்ப்பு உள்ளது. சருமம் இத்தனை பாதிப்புக்கு உள்ளாவதால், இதற்கு சந்தையில் எண்ணற்ற வேதிப்பொருட்கள் அடங்கிய கிரீம்கள் விற்கப்படுகின்றன. ஆனால் இதற்கு இயற்கை தீர்வுகளே நிறைய உள்ளன. இது உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு சருமத்தை பாதுகாக்க இயற்கை தீர்வுகளைத் தரும். இயற்கை உட்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இரண்டு ஃபேஸ் மாஸ்குகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை உங்களின் சரும பிரச்னைகளைப் போக்கும்.
சுருக்கங்களைப் போக்கும் கிரீம்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
தேன் – 1 ஸ்பூன்
யோக்ர்ட் – ஒரு ஸ்பூன்
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். அதில் தேன் மற்றும் யோகர்ட் கலந்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும். இதை உங்கள் முகத்தில் பரவலாக பூசவேண்டும். கண் இருக்கும் பகுதிகளில் பூசிக்கொள்ளக்கூடாது. இதை அரைமணி நேரம் காயவிடவேண்டும். பின்னர் உங்கள் முகத்தை சூடான தண்ணீரால் கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
நன்மைகள்
வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உங்கள் சரும்த்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்கும். உங்கள் சருமத்தை இறுக்கும். தேனில் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை தக்கவைக்க உதவுகிறது. யோகர்டில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் உடலில் செல்கள் சேதமடையாமல் காக்கிறது.
கரும்புள்ளிகளை அகற்றும் ஸ்கிரப்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை பழத்தின் சாறு – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஓட்ஸை மிக்ஸியில் அடித்து பொடி செய்துகொள்ளவேண்டும். அதில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதை உங்கள் முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் வரை நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவேண்டும். 10 நிமடங்கள் ஊறவிட்டு, பின்னர் சூடான தண்ணீரில் கழுவவேண்டும். இது உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்தும்.
நன்மைகள்
ஓட்ஸ் உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, உங்கள் அழுக்குகளை இயற்கை முறையில் வெளியேற்றுகிறது. தேன் உங்கள் உடலில் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குகிறது. சருமத்துக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், முகத்தில் பருக்களால் ஏற்படும் குழிகளை நீக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்