மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும்! வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான்!
மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும். வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான். வீட்டில் வளர்த்து அழகை அதிகரிக்கச் செய்யுங்கள்.

இந்த செடிகளை வளர்ப்பதற்கு மண்ணே தேவையில்லை. இது தண்ணீரிலே வளர்ந்துவிடும் உங்கள் வீட்டின் அழகையும் அதிகரிக்கச் செய்யும். இந்த தாவரங்களை நீங்கள் சரியான மண்ணுடன் உரங்கள், ஆர்கானிக் உரங்கள் என முறையாக கலந்துகொள்ள வேண்டும். அதில்தான் நீங்கள் தாவரங்களை வளர்க்கவேண்டும். தாவரங்கள் வளர்வதற்கு அடிப்படை என்றால் அது மண்தான். ஆனால் நீங்கள் மண் இல்லாமல் தண்ணீரில் மட்டுமே வைத்து சில செடிகளை வீட்டில் வளர்க்க முடியும். அது வீட்டுக்கு அழகையும் தரும். அந்த செடிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவற்றுக்கு வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்து அவற்றின் அழகை அதிகரியுங்கள்.
பொத்தோஸ்
பொத்தோஸ் செடிகளை நீங்கள் தண்ணீர் மட்டுமே வைத்து எளிதாக வளர்த்துவிட முடியும். இதற்கு மண் மற்றும் சகதி என எதுவும் தேவையில்லை. ஆனால் அது நன்றாக வளரும். நல்ல ஆரோக்கியமான பொத்தோஸ் செடியை நீங்கள் பாட்டில் அல்லது ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதை வைத்தால் போதும். அது சரசரவென வளர்ந்துவிடும். மொத்தமாக தண்ணீரில் மூழ்கும்படி வைத்தால் அழுகிவிடும். அது குறிப்பிட்ட அளவு மட்டுமே மூழ்க வேண்டும். சிறிது வெளியே நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.
பாம்புச் செடி
பாம்புச் செடியை நீங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பது எளிது. இது வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் ஒன்றாகும். இதன் இலைகளை நீங்கள் வெட்டி தண்ணீரில் வைத்தால் போதும். வேர்ப்பகுதியில் உள்ள தாவரத்தை வெட்டி, முக்கோண வடிவாக்கி, ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்தால் போதும். அடிப்பகுதி மட்டும் தண்ணீரில் மூழ்கியிருக்கவேண்டும். வேர்களும், தாவரமும் கடகடவென வளர்ந்துவரும்.