Top 6 Health Benefits of Beetroot : தினமும் நீங்கள் பீட்ரூட் எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா?
Benefits of Beetroot : தினமும் நீங்கள் பீட்ரூட் எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்கள் உடல் நலனுக்கு என்ன செய்கிறது என்று புரிந்துகொள்வீர்கள்.
பீட்ரூட்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உங்கள் உணவில் தினமும் பீட்ரூட்டை சேர்ப்பதால் அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள எண்ணற்ற நன்மைகள் மற்றும் அதன் மொறுமொறுப்பான குணம், அதன் சிவப்பு வண்ணம் என அனைத்தும் அதை சாலட்டாகவும், பல்வேறு உணவுகளாகவும் எடுத்துக்கொள்ளத் தூண்டுகிறது. உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு ஏற்றது இந்த பீட்ரூட்கள். பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை நீங்கள் பார்த்தால், நீங்கள் தினமும் பீட்ரூட் எடுப்பதை தவிர்க்கமாட்டீர்கள். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் உங்கள் உடலுக்கு நல்லது.
நீங்கள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமுடனும் இருக்க அவை உதவுகின்றன. உங்கள் வாழ்வில் பீட்ரூட்டை சேர்ப்பதற்கான 6 முக்கிய காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது
ரத்த அழுத்த அளவுகளை முறைப்படுத்த பீட்ரூட்கள் உதவுகிறது. இதில் உள்ள உயர் நைட்ரேட்கள், உடலில் நைட்ரிக் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. பீட்ரூட்கள் இருவகை ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. இதை வழக்கமாக எடுத்துக்கொண்டால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துக்களை குறைக்கிறது.
ஊட்டச்சத்து அளவுகள் மற்றும் உடல் எடை குறைப்பு
100 கிராம் வேகவைத்த பீட்ரூட்டில் 44 கலோரிகள், 1.7 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 2 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள்தான் இதை கலோரிகள் குறைந்த உணவாக மாற்றுகிறது. ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது
நைட்ரேட்கள் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கச்செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் ஆகியோரின் செயல்திறன்கள் அதிகரிக்க உதவுகிறது. இது செல்களில் உள்ள ஆற்றலை ஏற்படுத்தும் மிட்டோசோந்திரியா என்பதை வலுப்படுத்துனிறது. இதனால் பீட்ரூட் சாறை நீங்கள் பருகும்போது அது உங்களின் இதய மற்றும் சுவாச மண்டலத்தின் திறனை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியின்போது ஆக்ஸிஜன் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
வீக்கத்தை குறைக்கிறது
பல்வேறு வியாதிகளுக்கு வீக்கம்தான் மூல காரணமாகும். உங்கள் உடலில் ஏற்படும் சிறுசிறு உபாதைகள் உடனடியாக குணமாகாவிட்டால் வீக்கமாக மாறும். பீட்ரூட்டில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதில் உள்ள பீட்டாலைன் என்ற நிறமிகள் அதற்க வண்ணத்துக்கு காரணமாகின்றன. இது உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
குடல் ஆரோக்கியம்
செரிமான மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. இதில் உள்ள உட்பொருட்கள் உங்கள் கல்லீரலின் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது மற்றும் அவற்றை முறைப்படுத்துகிறது. பீட்ரூட் சாறு உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்களுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றலைத் தருகிறது.
மூளை ஆரோக்கியம்
வயது அதிகரிக்க அதிகரிக்க மூளை ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். பீட்ரூட்களால் மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் அதிகரிக்கும். குறிப்பாக அவை நினைவாற்றல் திறனை அதிகரிக்கின்றன. மூளையின் செயல்படும் திறனையும் வளர்க்கின்றன. இது உங்கள் மூளை ஆரோக்கியமாக இயங்க உதவும்.
பீட்ரூட்டை உங்கள் உணவில் சாலடாக, பொரியலாக, கூட்டாக, ஸ்மூத்தியாக, பழச்சாறாக, பூரி அல்லது சப்பாத்தி மாவில் சேர்த்து என எடுத்துக்கொள்ளலாம். பச்சையாகக்கூட சாப்பிடலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்