கருகருவென கூந்தல் நீளமாக, அடர்ந்து வளரவேண்டுமா? அதற்கு தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
Oct 19, 2024, 10:22 AM IST
கருகருவென கூந்தல் நீளமாக, அடர்ந்து வளரவேண்டுமா? அதற்கு தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கருகருவென கூந்தல் நீளமாக வளரவேண்டுமெனில், அதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பாருங்கள். தேங்காய் எண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நற்குணங்கள் உள்ளது. உங்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது எண்ணற்ற நற்குணங்களைத் தரும் என்று அளவிட்டுக் கூறமுடியாது. அத்தனை நன்மைகள் நிறைந்தது. அது உங்கள் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. தலைமுடியை கண்டிஷனிங் செய்கிறது. ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்கள் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க நீங்கள், தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும் என்று பாருங்கள். இந்த முறையைப் பின்பற்றினால், நீங்கள் தேங்காய் எண்ணெயின் அதிகப்படியான நற்குணங்களைப் பெற முடியும்.
சரியான தேங்காய் எண்ணெய்
ஆர்கானிக் மற்றும் சுத்திகரிக்கப்படாத, விரிஜின் தேங்காய் எண்ணெயை உபயோகித்துக்கொள்ளுங்கள். இது குறைவான அளவுதான் பதப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்குகிறது.
உங்கள் தலைமுடியின் நிலை மற்றும் வகையை தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் தலைமுடி கோரை முடியா? அல்லது பறக்கும் முடியா அல்லது சுருட்டையான முடியா என்பது முதலில் முக்கியம். அதன் நிலையும், வறண்ட தலைமுடியா அல்லது ஈரப்பதம் நிறைந்ததா அல்லது சேதமானதா அல்லது எந்த பிரச்னையும் இல்லாததா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் தலைமுடிக்கு எவ்வளவு எண்ணெய் தேவை என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். வறண்ட மற்றும் சேதமான கேசத்துக்கு அதிக எண்ணெய் வைத்தால்தான் நன்மை கிடைக்கும். குறைவான எண்ணெயை நீங்கள் பிசுபிசுப்பான மற்றும் வழக்கமான தலைமுடிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் தலைமுடியை தயாராக்குங்கள்
உங்கள் தலைமுடியை தயாராக்க அதை சுத்தம் செய்து, உலரவிடவேண்டும். உங்கள் தலைமுடி அதிக சிக்குகள் கொண்டது என்றால், அவற்றை முற்றிலும் நீக்கவேண்டும். அதற்கு நீங்கள் அகலாமான பற்கள் கொண்ட சீப்புக்களை உபயோகிக்கவேண்டும்.
தேங்காய் எண்ணெயை சூடாக்க வேண்டும்
தேங்காய் எண்ணெய் குளிர் காலங்களில் உறையும் தன்மை கொண்டது. எனவே அவற்றை சூடாக்கி உபயோகிக்க வேண்டும். சூடாக்குதல் என்றால், கொதிக்கவிடக்கூடாது, அதை மிதமான அளவு சூடாக்கவேண்டும். தேங்காய் எண்ணெய் பாட்டிலை சூடான தண்ணீரில் வைத்து உருக்கிக்கொண்டால் போதும். இது உங்களுக்கு அதை தலையில் வைக்க ஏதுவாக்கும் அல்லது வெயிலில் சிறிது நேரம் வைத்தால் உருகிவிடும்.
தலைமுடி, வேர்க்கால்கள்
தேங்காய் எண்ணெயை தலைமுடி மற்றும் வேர்க்கால்களில் தடவவேண்டும். கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்து முதலில் உங்கள் முடியில் வேர்க்கால்களில் தடவவேண்டும். நன்றாக அழுத்தி மசாஜ் செய்யவேண்டும். அடுத்து உங்கள் கூந்தலின் நீளம் வரை தடவுங்கள். இதை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். அப்போதுதான் தலைமுடி வளர்ச்சி தூண்டப்படும்.
வேர்க்கால்களில் மசாஜ்
தலையில் எண்ணெய் தடவியவுடன், உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்யவேண்டும். கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். இது உங்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும். உங்களின் மனதை அமைதிப்படுத்தும்.
தலை முழுவதிலும் பரவலாக எண்ணெய் தேய்க்கவேண்டும்
சிக்கு எடுக்கும் சீப்பை வைத்து, நன்றாக சீவவேண்டும். உங்கள் கைகளால் அனைத்து இடங்களிலும் தேங்காய் எண்ணெய்படும்படி மசாஜ் செய்யவேண்டும். உங்கள் தலைமுழுவதிலும் எண்ணெய் தடவப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
விட்டுவிடுங்கள்
தேங்காய் எண்ணெயை தலையில் ஒரு இடத்தில் கூட விடாமல் தடவி, தலை முழுவதிலும் பரவச்செய்து, மசாஜ் செய்து ஒரு மணி நேரம் விட்டுவிடவேண்டும். உங்களுக்கு இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கவேண்டுமெனில் ஓரிரவு ஊறவைத்துவிடுங்கள். உங்கள் தலைமைய ஷவர் கேப் வைத்து மூடிக்கொள்ளுங்கள். அதனால் தலைமுடி பாதிக்கப்படாது.
ஷாம்பூ தேய்ப்பது
உங்களுக்கு விரும்பிய நேரம் தலையில் தேங்காய் எண்ணெயை வைத்துவிட்டு, அதை நன்றாக அலசவேண்டும். உங்களுக்க தேவைப்பட்டால் இரண்டு முறை ஷாம்பூ போட்டு நன்றாக அலசிக்கொள்ளுங்கள். உங்கள் தலை முடியில் இருந்து அனைத்து பிசுபிசுப்பும் அகன்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் சல்ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து என்ன?
தலையை அலசிவிட்டு, நன்றாக முடியை காய வைத்து விடுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த ஹேர்ஸ்டைலை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி இயற்கையிலே மிருதுவாக இருப்பதை காண முடியும். தலைமுடி ஆரோக்கியமானதாகவும், மிருதுவானதாகவும், உங்களால் இழுத்து கட்ட முடிந்ததாகவும் இருக்கும்.
டாபிக்ஸ்