இதய ஆரோக்கியத்தை காக்கும்; பசும்பாலுக்கான மாற்று; தேங்காய்ப்பாலில் உள்ள நற்குணங்களை பாருங்கள்!
இதய ஆரோக்கியத்தை காக்கும், பசும்பாலுக்கான மாற்று என தேங்காய்ப்பாலில் உள்ள நற்குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேங்காய்ப்பால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாறு எடுத்தும் பருகலாம். பழங்களில் பால் கலந்து பருகுவதற்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து பழச்சாறுகளை பருகிப்பழகலாம். தேங்காய்ப்பாலில் பொதுவாக சாதம் செய்ய முடியும். அதன் சுவை பிரியாணிக்கே டஃப் கொடுக்கும். தேங்காய்ப்பால் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
தேங்காய்ப்பாலின் நன்மைகள்
தேங்காய்ப்பாலில் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது லாக்டோஸ் இல்லாததது. தாவர அடிப்படையிலானது. நுண்ணுயிர்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது.
ஒரு கப் தேங்காய்ப்பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதம் உள்ளது. 16.9 கிராம் கொழுப்பு, 14.6 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 3.3 கிராம் கார்போஹைட்ரேட், 2.0 கிராம் சர்க்கரை உள்ளது.
தேங்காய்ப்பாலில் கொழுப்பு, சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. தேங்காய்ப்பால் கொழுப்பு நீக்கப்பட்டும் கிடைக்கிறது. தேங்காய்ப்பால் உங்கள் உணவுக்கு கிரீமி டெக்ச்ரைக் கொடுக்கும்.
ஃபேட்டி ஆசிட்கள்
தேங்காயில் எண்ணற்ற கொழுப்பு உள்ளது. அது மற்ற நட்ஸ்களில் உள்ளதைப்போலன்றி, மீடியம் செயின் சாச்சுரேடட் ஃபேட்டி ஆசிட்கள் அல்லது லாரிக் ஆசிட்களாக உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட்கள், 6 முதல் 12 வரையிலான கார்பன் அணுக்களால் உருவானது. இதில் நீண்ட சங்கில் ஃபேட்டி அசிட்தான 12 அல்லது அதற்கும் மேற்பட்ட கார்பன் அணுக்களாக உள்ளது. இந்த வித்யாசம் ஏற்படுத்தும் தாக்கங்கள் தான் கொழுப்பு எப்படி செரிக்கிறது என்பதில் பிரதிபலித்து, உங்கள் உடலில் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. பல்வேறு வகையிலான ஃபேட்டி ஆசிட்களை நீங்கள் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் உடல் தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட்களை எளிதில் செரித்துவிடும். அவற்றை ஆற்றலாகவும் விரைவில் மாற்றிவிடும்.
லாக்டோஸ் இல்லாதது
தேங்காய்ப்பாலில் இயற்கையாகவே லாக்டோஸ் இல்லை. இதை பாலுக்குபதில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாலில் உள்ள முக்கிய கார்போஹைட்ரேட்டாக இந்த லாக்டோஸ் உள்ளது. இது பாலூட்டிகளிடம் இருந்து பெறப்படும் அனைத்து வகை பாலிலும் உள்ளது. மனிதன், ஆடு, பசு, செம்மறி என அனைத்து பாலிலும் இருக்கும். இது இரு சர்க்கரைகளால் ஆனாது. உங்கள் உடலுக்கு இதை செரிக்கச் செய்ய லாக்டேஸ் என்ற எண்சைம் தேவைப்படுகிறது. எனவே லாக்டோஸ் அலர்ஜ் கொண்டவர்களுக்கு இந்தப்பால் மாற்றாக உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு இந்த எண்சைம் உடலில் குறைவாக இருக்கும்.
சைவம்
சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு தேங்காய்ப்பால் ஒரு சிறந்த மாற்று ஆகும். இது அவர்களின் ஸ்மூத்திக்கள் ம்ற்றும் மில்க் ஷேக்குகளை இனிமையாக்குகிறது. பாலுக்குப்பதில் இதை சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு சிறந்தது. இது வீகன் சீஸின் முக்கிய உட்பொருளாகவும் உள்ளது. ஆனால் பசும்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதில் கிடையாது. இதில் புரதம் குறைவு, சாச்சுரேடட் கொழுப்பு அதகிம். இதை நீங்கள் பாலுக்கு மாற்றான தேர்வாகக்கொண்டீர்கள் என்றால், இதில் இல்லாத ஊட்டச்சத்துகளைப் பெற நீங்கள் வெளியில் பல்வேறு உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
வீக்கத்துக்கு எதிரானது, நுண்ணுயிர்களுக்கு எதிரானது, பூஞ்சைக்கு எதிரான நற்குணங்கள் கொண்டது
இதில் உள்ள ஃபேட்டி ஆசிட், உங்கள் உடலில் மோனோலாரின் உருவாக உதவுகிறது. இதன் பாக்டீரிய எதிர்ப்பு, கிருமிகள் எதிர்ப்பு, நுண்ணுயிர்கள் எதிர்ப்பு குணம், பல்வேறு வகை நோய்களையும் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. தேங்காய்ப்பால் பருகுவது உங்கள் உடலில் எண்ணற்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்
இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் கல்லீரல் மூலம் ஆற்றலாக வளர்சிதை மாற்றம் பெறுகின்றன. இது கொழுப்பு மற்றும் சாச்சுரேடட் கொழுப்பைப் போலன்றி, உடலால் விரைவில் செரிக்கப்படுகிறது. கொழுப்பாக சேமிக்கப்படுவதில்லை. தேங்காயில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள், ரத்தத்தில் உள்ள கொழுப்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உடலில் கொழுப்பு சமநிலையைப் பேணி, இதய ஆரோக்கியத்தை காக்கிறது என்று அண்மை ஆய்வுகள் கூறுகின்றன.
அல்சரை குணப்படுத்துகிறது
தேங்காய்ப்பால் அல்சரை குணப்படுத்துவது விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேங்காய்ப்பால் அல்சருக்கு எதிரான மருந்துகளில் உள்ள உட்பொருட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இந்த உட்பொருட்கள் வயிற்றுக்கு இதமான சூழலை உருவாக்குகிறது.
தேங்காய்ப்பாலில் அலர்ஜி ஏற்படுத்தும் குணங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் இது யாருக்காவது அலர்ஜியை ஏற்படுத்தினால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது. எனினும் தேங்காய்ப்பாலை மிதமான அளவுதான் பயன்படுத்த வேண்டும். அதிகளவு உபயோகித்தால் வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். தேங்காய்ப்பாலை பயன்படுத்தும்போதும் அதில் தண்ணீர் அதிகம் கலந்து நீர்த்துப்போகச் செய்துதான் உபயோகிக்கவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்