உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள்!

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 14, 2024 02:47 PM IST

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? எனில் இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள். உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள்!
உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள்!

அதுபோல் ஃபிரிட்ஜ் உங்களை கைவிட்டுவிடாமல் இருக்கவேண்டுமெனில் நீங்கள் ஃபிரிட்ஜை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்போது பழுதாகி உங்களை கவலைக்குள்ளாகும் என்று கூறமுடியாது. எனவே ஃபிரிட்ஜை நீங்கள் மாதத்தில் ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்துவிடவேண்டும். இல்லாவிட்டால் அதில் வைக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கிவிடும்.

ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்யவேண்டும்?

ஃபிரிட்ஜில் எப்போது வாரத்திற்கு ஒருமுறை ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி அப்படியே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் அது ஃபிரிட்ஜில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்கும்.

உங்கள் ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமெனில் மாதத்தில் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது. ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய சரியான நேரமாக ஃபிரிட்ஜில் குறைவாகப் பொருட்கள் இருக்கும் நேரம்தான் உகந்தது. அப்போதுதான் நீங்கள் எளிதாக அதை சுத்தம் செய்துவிட முடியும்.

ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்யவேண்டும்?

சுத்தம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் ஃபிரிட்ஜை அணைத்துவிடவேண்டும். ஸ்டெபிளைசரின் மின் இணைப்பை துண்டித்துவிடவேண்டும். இதனால் ஃபீரீசர் மற்றும் ஃப்ரிட்ஜில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

இப்போது ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வெளியே வைத்துவிடவேண்டும். ஒவ்வொரு தட்டிலுமே உள்ள பொருட்களை தனித்தனியே எடுத்து வைக்கவேண்டும். அப்போதுதான் அந்தந்த தட்டில் நீங்கள் மீண்டும் சரியாக அடுக்க ஏதுவாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் உள்ள தட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக கழற்ற வேண்டும். அவ்வாறே ஃபிரிட்ஜ் டோரில் உள்ள கண்டெய்னர்களையும் அகற்றவேண்டும். இதை வாஷிங் ஜெல் போட்டு சுத்தம் செய்து நன்றாக காய வைத்து கழுவி வைக்கவேண்டும்.

ஃபிரிட்ஜை எப்படி சுத்தம் செய்யவேண்டும்?

ஃபிரிட்ஜ் முழுவதும் காலி செய்துவிட்டு, வாஷிங் ஜெல்லை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து, ஸ்பான்ச் நாரில் முழுவதும் சுத்தம் செய்துகொள்ளவேண்டும். பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்துவிட்டு, அடுத்து காய்நத டவலில் துடைக்கவேண்டும். உள்ளே ஈரம் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு, திறந்து வைக்கவேண்டும்.

ஃபிரிட்ஜின் வெளிப்புறம் தண்ணீரை ஸ்பிரேயர் வைத்து ஸ்பிரே செய்து துடைத்து எடுக்கவேண்டும்.

ப்ரிட்ஜை ஒரு மணி நேரம் திறந்து வைத்து நன்றாக உலர்ந்த பின்னர், அதில் உள்ளவற்றை ப்ளேட்கள் மற்றும் சைட் டோரில் உள்ள கண்டெய்னர்களை பொறுத்தி, பொருட்களை அடுக்க வேண்டும். உங்கள் ஃபிரிட்ஜ் பளபளப்பாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ரெசிபிக்கள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை தேர்ந்தெடுத்து லைஃப்ஸ்டையில் பகுதியில் உங்களுக்காக ஹெச்.டி தமிழ் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. எனவே தொடர்ந்து இதுபோன்ற எண்ணற்ற தகவல்களைப் பெற எங்கள் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.