Red Banana Smoothie : மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை தீர்க்கும்! மாலைக்கண் நோயை அடித்துவிரட்டும்! அது எது தெரியுமா?
Jul 02, 2024, 05:14 PM IST
Red Banana Smoothie : மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை தீர்க்கும்! மாலைக்கண் நோயை அடித்துவிரட்டும்! அது எது தெரியுமா?
தேவையான பொருட்கள்
செவ்வாழைப்பழம் – 1
பால் – ஒரு டம்ளர்
தேன் – 4 ஸ்பூன்
பாதாம் – 3
முந்திரி – 3
பிஸ்தா – 3
செய்முறை
செவ்வாழைப்பழம், பால், பாதாம், முந்திரி, பிஸ்தா என அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக ஸ்மூத்தி பதத்துக்கு அடித்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதில் தேனை கலக்கவேண்டும்.
அதை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகவேண்டும். இப்படி பருகும்போது நீங்கள் ப்ரேக் பாஸ்ட்டே சாப்பிடவேண்டிய தேவையில்லை. இதுவே வயிறை நிறைத்துவிடும். அதையும் தாண்டி உங்களுக்கு பசி ஏற்பட்டால் இரண்டு இட்லிகள் மட்டும் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
செவ்வாழை மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாலைக்கண் நோய், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்பிரச்னைகள், மலச்சிக்கல், மனச்சிக்கல் வரை அனைத்தையும் தீர்த்துவைத்துவிடும்.
பொதுவாகவே அனைத்து வாழைப்பழங்களிலுமே நார்ச்சத்துக்களும், தண்ணீர் சத்துக்களும் நிறைந்துள்ளன. அதனால் தான் விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கு இடையில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கின்றன. செவ்வாழை நரம்பு தளர்ச்சி நோயை அடித்து விரட்டுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட செவ்வாழையின் பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
செவ்வாழையின் நன்மைகள்
100 கிராம் செவ்வாழையில் 89 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 22.84 கிராம், நார்ச்சத்துக்கள் 2.6 கிராம், புரதம் 1.09 கிராம், கொழுப்பு 0.33 கிராம், பொட்டாசியம் 358 மில்லி கிராம், மெக்னீசியம் 27 மில்லி கிராம், பாஸ்பரஸ் 22 மில்லி கிராம், வைட்டமின் சி 8.7 மில்லி கிராம், கால்சியம் 5 மில்லி கிராம், சோடியம் 1.3 மில்லி கிராம், வைட்டமின் பி9 13.6 மைக்ரோகிராம் உள்ளது.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க செவ்வாழை உதவுகிறது.
மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள், ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
கண்களை பராமரித்து கண் பார்வையைக் கூராக்கும்.
செவ்வாழையில் அதிகம் உள்ள இரும்புச்சத்துக்கள், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைக் கட்டுப்படுத்துகிறது.
செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, தேவையற்ற நொருக்குத்தீனிகள் உட்கொள்வதை தடுக்கிறது.
இதனால் உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.
செவ்வாழையில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6, உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலியை குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்