Badam Pisin Payasam : இதை முதல் நாள் இரவே ஊறவைத்தால் போதும்! அடுப்பே இல்லாமல் பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Badam Pisin Payasam : இதை முதல் நாள் இரவே ஊறவைத்தால் போதும்! அடுப்பே இல்லாமல் பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்!

Badam Pisin Payasam : இதை முதல் நாள் இரவே ஊறவைத்தால் போதும்! அடுப்பே இல்லாமல் பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்!

Priyadarshini R HT Tamil
Published Jun 25, 2024 12:00 PM IST

Badam Pisin Payasam : உலர்ந்த பழங்கள் மற்றும் பாதாம் பிசின் ஆகியவற்றை முதல் நாள் இரவே ஊறவைத்துவிட்டால் போதும். அடுப்பே இல்லாமல் பட்டுன்னு செய்து முடித்துவிடலாம் பாதாம் பிசின் பாயாசம்.

Badam Pisin Payasam : இதை முதல் நாள் இரவே ஊறவைத்தால் போதும்! அடுப்பே இல்லாமல் பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்!
Badam Pisin Payasam : இதை முதல் நாள் இரவே ஊறவைத்தால் போதும்! அடுப்பே இல்லாமல் பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்!

தேவையான பொருட்கள்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

பாதாம் – ஒரு கைப்பிடி

பிஸ்தா – ஒரு கைப்பிடி

உலர்ந்த திராட்சை – ஒரு கைப்பிடி

உலர் அத்தி – 5

பேரிச்சைப்பழம் – 5 (விதை நீக்கியது)

பாதாம் பிசின் – சிறிது

ஏலக்காய் – 2

நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் – தேவையான அளவு

பூசணிக்காய் விதை – ஒரு ஸ்பூன்

வெள்ளரி விதை - ஒரு ஸ்பூன்

தர்ப்பூசணி விதை – ஒரு ஸ்பூன்

குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை

பாதாம் பிசினை ஒரு அகலமான பாத்திரத்தில் இரவே ஊறவைத்துவிடவேண்டும். ஏனெனில் பாதாம் பிசின் ஊறியபின் அதிகம் வரும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் அத்தி, உலர் திராட்சை, பேரிச்சை பழம் ஆகிய அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும்.

இவையிரண்டையும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். எனவே உங்களுக்கு தேவைப்படுவதற்கு தேவையான நேரத்திற்கு போதிய நேரம் முன்னர் ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

நன்றாக ஊறிய உலர் பழக்கலவையை, அந்த தண்ணீருடன் மிக்ஸிஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயில் ஏலக்காய் சேர்த்து பால் பிழிந்துகொள்ள வேண்டும்.

ஒரு அகலாமான அரைத்த உலர் பழக்கலவை, பாதாம் பிசின், தேங்காய்ப்பால் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

நாட்டுச்சர்க்கரை அளவாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஏனெனில் இனிப்புக்கு ஏற்கனவே அத்தி, பேரிச்சை, உலர் திராட்சை போன்றவை உள்ளது.

இதை பரிமாறும்போது குங்குமப்பூ, பூசணி, வெள்ளரி மற்றும் தர்ப்பூசணி விதைகள் ஆகியவற்றை துருவி சிறிது மேலே தூவி பரிமாறினால் சுவை அள்ளும்.

சுவையான பாயாசம், வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

உங்கள் வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்தால், அதில் இந்த பாயாசத்தை பரிமாறலாம். விருந்தினர்கள் விரும்பி சாப்பிட்டுவிட்டு, உங்களை கட்டாயம் பாராட்டுவார்கள்.

பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது

உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.

உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.

வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.

தசைகளை வலுப்படுத்துகிறது.

பருவகால பிரச்னைகளை போக்குகிறது.

கருவுறுதலுக்கு உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது.

சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது.

உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.

பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். கோடை காலங்களில் உடல் வெப்பநிலை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது. மேலும் எலும்பு, மூட்டுகள், தசைகளை குளிரில் இருந்து காக்கிறது. உடலை குளிர்விக்கும் பானங்களில் கலந்து இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்து பருக முடியும்.

இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதிகம் எடுத்தால் மூச்சுத்திணறல், நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் இதனை உட்கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.