தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cashew Nuts : சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடலாமா.. ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம் பாருங்க!

Cashew Nuts : சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடலாமா.. ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
May 31, 2024 08:19 PM IST

Cashew Nuts : உலகம் முழுவதும் முந்திரியை விரும்புபவர்கள் அதிகம். ஆனால் அவற்றை சாப்பிட பயப்படுகிறார்கள். அவை புரதம், நார்ச்சத்து, தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளன. அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளும் இதில் அதிகம். இவை அகால மரணம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடலாமா.. ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம் பாருங்க!
சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடலாமா.. ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம் பாருங்க! (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முந்திரிகள் சாப்பிடலாம் தெரியுமா?

சிலர் சத்தானது என நினைத்து தினமும் அதிக அளவில் முந்திரி பருப்புகளை உட்கொள்கின்றனர். அது மிகவும் தவறான விஷயம். ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முந்திரி சாப்பிட்டால் போதுமானது அப்போது தான் உடல் எடை அதிகரிக்காது. அது மட்டும் இல்லாமல் அந்த அளவில் சாப்பிடும் போது எடையைக் குறைக்க உதவுகின்றன. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கிறது. இது இதயத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோயைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கும் முந்திரி பருப்புகளை சாப்பிடலாம். ஆனால்  ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முந்திரி சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

முந்திரியில் உள்ள சத்துக்கள்

உலகம் முழுவதும் முந்திரியை விரும்புபவர்கள் அதிகம். ஆனால் அவற்றை சாப்பிட பயப்படுகிறார்கள். அவை புரதம், நார்ச்சத்து, தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளன. அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளும் இதில் அதிகம். இவை அகால மரணம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று முந்திரி. தினமும் காலை உணவின் போது நான்கு முந்திரி சாப்பிட்டால் போதும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். முந்திரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். அவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கின்றன. முந்திரி பருப்பில் பாலிபினால்கள் மற்றும் கெரடினாய்டுகள் நிறைந்துள்ளன.

எடை குறையலாம்

முந்திரியில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம்... மூன்று நான்கு பருப்புகளை மட்டும் சாப்பிடுங்கள். வயிறு நிரம்பிய உணர்வு. எனவே மற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, முந்திரியை உணவில் தவறாமல் சேர்த்து இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முந்திரிகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. சுவைக்காக உப்பு அல்லது எண்ணெய் சேர்க்காமல் வெறுமனே சாப்பிடுங்கள். வறுத்த முந்திரியை விட வேகவைத்த முந்திரி ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. 

வறுத்த முந்திரி அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களை குறைக்கும். முந்திரியை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். அவற்றில் உள்ள சத்துக்களும் இழக்கப்படுவதில்லை. அளவாக சாப்பிடும் போது உடலுக்கு மிகவும் நல்லது. சற்றே கூடுதலான அளவில் எடுக்கும் போது உடலுக்கு எதிர்மறையாக அமைந்து விடுகிறது.

சரும பளபளப்பு

பொதுவாக முந்திரி பருப்புகளில் செலினியம் சத்து அதிகம் உள்ளது. இது வைட்டமின் ஈ-யுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. தவிர முந்திரியில் உள்ள காப்பர் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளபாக்க உதவும்

அதேசமயம் நீண்ட நாள் உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் முந்திரியை தினமும் உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்