தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amala Paul: கொளுத்தும் வெயிலில் அப்படி ஒரு செயல்.. அமலா பால் மீது கடும் குற்றச்சாட்டு வைத்த மேக்கப் கலைஞர்

Amala Paul: கொளுத்தும் வெயிலில் அப்படி ஒரு செயல்.. அமலா பால் மீது கடும் குற்றச்சாட்டு வைத்த மேக்கப் கலைஞர்

Aarthi Balaji HT Tamil
Jul 01, 2024 10:47 AM IST

Amala Paul: சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமா, ஒருமுறை அமலா பாலுடன் சென்னையில் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும், அவர் எப்படி நடத்தினார் என கூறினார்.

கொள்ளுத்து வெயிலில் அப்படி ஒரு செயல்.. அமலா பால் மீது கடும் குற்றச்சாட்டு வைத்த மேக்கப் கலைஞர்
கொள்ளுத்து வெயிலில் அப்படி ஒரு செயல்.. அமலா பால் மீது கடும் குற்றச்சாட்டு வைத்த மேக்கப் கலைஞர்

Amala Paul: நடிகர்களை வெள்ளித்திரையில் சிறப்பாகக் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஹீரோயின்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அழகாக தயாராகி பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். ஆனால், படத்தின் ஷூட்டிங் செட்டில் அவர்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. சில சமயங்களில் பல நட்சத்திரங்களுடன் மோசமான அனுபவங்கள் ஏற்படுவதாகவும் ஒப்பனை கலைஞர்கள் கூறுகின்றனர்.

ஹேமா பேட்டி

பிரபல சிகையலங்கார நிபுணர் ஹேமா, நடிகை அமலா பால் தன்னை வேனிட்டி வேனில் இருந்து இறக்கிவிட்டதாக தெரிவித்து உள்ளார். ஏப்ரல் - மே படப்பிடிப்பின் போது, ​​மிகவும் சூடாக இருந்ததாகவும், நிழலுக்காக ஒரு மரம் கூட இல்லாததால் வேனிட்டி வேனில் ஏறியதாகவும் ஹேமா கூறுகிறார்.

வெளியே போக சொன்ன அமலா பால்

அவர் கூறுகையில், “ ஒருமுறை அமலா பாலுடன் சென்னையில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன். நான் அவர்களை நேரடியாக அறியவில்லை, ஒரு நண்பர் மூலம் சென்றேன். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படப்பிடிப்பின் போது மிகவும் சூடாக இருந்தது. நிழலுக்கான இடத்தில் ஒரு மரம் கூட இல்லை.

எனவே வேனிட்டி வேனில் ஏறினோம். வேனில் இரண்டு பிரிவுகள் உள்ளன, ஒன்று கலைஞர்கள் அமரும் மற்றும் மற்றொன்று தொழில்நுட்ப வல்லுநர்கள். அதனால் உள்ளே நுழைந்து உள்ளே அமர்ந்ததும் அமலா பால், மேனேஜரிடம் சொல்லி எங்களை போகச் சொன்னார்.

ட்ரெண்டிங் செய்திகள்

வேனில் அனுமதி இல்லை

வேனிட்டி வேனில் அவர்களுக்கு அனுமதி இல்லை என சொன்னார். அதனால் மேனேஜர் சொன்னதும் நானும், மேக்கப் மேனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அவ்வளவு வெப்பமான காலநிலையில் நாம் எங்கு செல்வது?' நாங்கள் எங்கே இருப்பது என யோசித்து பேசி பார்த்தோம். இன்னும் நாங்கள் வேனில் இருந்து இறங்க வேண்டியதாயிற்று. தென்னிந்தியாவில் இது எப்படி இயங்குகிறது என்று தெரியவில்லை.

வேனிட்டி வேனுக்குள் ஹேர் ஸ்டைலிஸ்டுகள் மற்றும் ஒப்பனை கலைஞர்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிகள் அவர்களிடம் இருக்கலாம்.

கலைஞர்களுக்கு பாராட்டு கிடைப்பது இல்லை

அவர்கள் சிகையலங்கார நிபுணர்களையும் ஒப்பனை கலைஞர்களையும் பாராட்டுவதில்லை. அவர்களுக்கு நம்மை எப்படி அறிமுகப்படுத்துவது?என தெரியவில்லை.

தபு போன்ற நட்சத்திரங்களுடன் நான் பணிபுரிந்துள்ளேன். எங்களை நன்றாக நடத்துவார். ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் ஒப்பனை கலைஞருக்காக முழு வேனையும் முன்பதிவு செயவார். நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இது தென்னிந்தியாவில் அதிகம் நடக்கிறது “ என்றார். ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமா, கதாநாயகி அமலா பால் நடந்துகொண்ட விதம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.