தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Raw Papaya Poriyal : பப்பாளிக்காய் பொரியல்! வித்யாசமான சுவையும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது!

Raw Papaya Poriyal : பப்பாளிக்காய் பொரியல்! வித்யாசமான சுவையும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil

May 07, 2024, 05:31 AM IST

google News
Raw Papaya Poriyal : பப்பாளிக்காயில் பொரியல் செய்ய முடியுமா? இதோ ரெசிபி செய்து பார்த்து மகிழுங்கள்.
Raw Papaya Poriyal : பப்பாளிக்காயில் பொரியல் செய்ய முடியுமா? இதோ ரெசிபி செய்து பார்த்து மகிழுங்கள்.

Raw Papaya Poriyal : பப்பாளிக்காயில் பொரியல் செய்ய முடியுமா? இதோ ரெசிபி செய்து பார்த்து மகிழுங்கள்.

விருந்தோம்பல் வலைதளத்தை சேர்ந்த செஃப் முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் ஹெச்.டி தமிழுடன் பகிர்ந்துகொண்ட பப்பாளிக்காய் பொரியல் ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பப்பாளிக் காய் – 400 கிராம்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

துருவிய தேங்காய் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

வேகவைத்த கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அதிகம் பழுக்காமல் பாதியளவு பழுத்த பப்பாளிக்காயை எடுத்துக்கொள்ளவேண்டும். அதன் தோலை சீவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு மெலிதாக துருவிக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் துருவிய பப்பாளிக்காயை சேர்த்து தொடர்ந்து சிறிது நேரம் வதக்கவேண்டும். பப்பாளிக்காயை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

பின் கால் கப் தண்ணீர் தெளித்து கலந்து மூடி வைத்து வேக வைக்கவேண்டும்.

பப்பாளிக்காய் பதமாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கலந்து தேங்காய்த்துருவல் சேர்த்து கலக்கவேண்டும்.

கடைசியான மல்லித்தழை மற்றும் வேகவைத்த கடலைபருப்பு கலந்து இறக்கவேண்டும்.

வேகவைத்த கடலை பருப்பு சேர்ப்பது முற்றிலும் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்க்கவேண்டியது தான்.

 

பப்பாளிக்காயில் உள்ள நன்மைகள்

பப்பாளி பழத்தைப்போல் பப்பாளிக்காயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை வைத்து பல்வேறு உணவுகள் செய்யப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பொட்டசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள பப்பைன் என்ற எண்சைம்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள மற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.

செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கிறது.

மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பப்பாளிக்காயை எப்படி சாப்பிட வேண்டும்?

பப்பாளிக்காயின் தோலை பீலர் வைத்து நீக்கவேண்டும்.

பப்பாளிக்காயை இரண்டாக வெட்டி இடையில் உள்ள விதைகளை நீக்கிவிடவேண்டும்.

இதை துருவி அல்லது நறுக்கி உங்கள் ரெசிபிக்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதில் சட்னி, ஊறுகாய், டூட்டி ஃப்ரூட்டி, சாலட், கிரேவி என எதுவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

இது வெள்ளரியை சுவைப்போன்று ருசியாக இருக்கும்.

இதை எப்படி சாப்பிட்டாலும் சரிவிகித உணவுடன் மிதமான அளவு சாப்பிடவேண்டும். இதை சாப்பிடுவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும். எனவே அவர்கள் கவனமுடன் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி