Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?

Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
May 06, 2024 05:28 AM IST

Tomato - Coconut Chutney : அனைத்து டிபஃனுக்கும் ஏற்ற தக்காளி தேங்காய் சட்னி செய்வது எப்படி?

Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?
Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?

அதை எப்படி செய்வது என்றும் செய்து காட்டியுள்ளார். அதை பார்த்து அப்படியே செய்து மகிழுங்கள். 

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10

நன்றாக பழுத்த தக்காளி – 2

வரமிளகாய் – 7

தேங்காய்த்துருவல் – கால் கப்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய்விட்டு சூடானவுடன், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கியவுடன், ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

அதே கடாயில் நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ள வேணடும்.

தக்காளியின் தோல் நிறம் மாறி லேசாக சுருங்கி வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

மிக்ஸி ஜாரில் சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறவைத்த பொருட்களை சேர்த்து அரைக்கவேண்டும்.

பின் அதனுடன் கால் தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும். பின் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்னியில் கலந்து கொள்ளவேண்டும். தக்காளி தேங்காய் சட்னி தயார்.

இது இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பொங்கல் என அனைத்து டிபஃன்களுக்கும் ஏற்றது.

 

குறிப்புகள்

இதில் தேங்காயை வதக்கியும் சேர்க்கலாம். அது ஒரு வித்யாசமான சுவையைக்கொடுக்கும்.

வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யும்போது ஒரு வித்யாசமான சுவை கிடைக்கும்.

நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.