Hair Fall Remedy : கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க! தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது!
Hair Fall Remedy : கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
நெய் – அரை ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
அரை லிட்டர் தண்ணீரில் கறிவேப்பிலையை இரவு முழுவதும் ஊறவிடவேண்டும்.
அடுத்த நாள் காலையில் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
அது 150 மில்லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விடவேண்டும். வடிகட்டி அதில் நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் வாரம் ஒருமுறை பருகவேண்டும்.
இப்படி செய்தால் தலையில் முடி கருகருவென நீளமாக வளரும். ஒரு முடி கூட கொட்டாது.
கறிவேப்பிலை ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது.
வெறும் கறிவேப்பிலை தண்ணீரை பருகினால் அது குடலை வறண்டு போகச்செய்யும் அதனால்தான் அதனுடன் நெய் சேர்த்து பருகவேண்டும்.
இதை குடித்தபின் வேறு டீ அல்லது காபி போன்ற பானங்கள் பருகுவதை தவிர்க்கவேண்டும்.
கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்
கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
கறிவேப்பிலை ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
கறிவேப்பிலையில் உட்பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவை நீக்கப்பயன்படுகின்றன.
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றம் சி, அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை காப்பதுடன் அதன் இயக்கத்துக்கும் உதவுகின்றன.
சேதமடைந்த தலைமுடிக்கு தலைசிறந்த பலனளிக்கிறது கறிவேப்பிலை. தலைமுடி அடர்த்தியாக வளரவும், தலை முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பூஞ்ஜைக்கு எதிரான திறன், முடிக்கால்களில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது பொடுகுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்ட் நிறைந்தது. இது கார்னியாவை கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ குறைபாடு, மாலைக்கண், பார்வையிழப்பு, கண் புரை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. ரெட்டினாவை பாதுகாத்து பார்வையிழப்பு எதிராக போராடுகிறது.
கார்போசோல் ஆல்கலைட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி பாக்டீரியாக்கள், அழற்சிக்கு எதிரான தன்மைகள் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது.
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசிரைட்களை குறைக்க உதவி, உடல் பருமனை தடுக்கிறது.
புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளால் ஏற்படும் குரோமோசோமல் சிதைவை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னைகளை சரிசெய்கிறது. வயிற்றுப்போக்கு பிரச்னைகளை சரிசெய்கிறது. வலியை குறைக்கிறது.
ஒருவர் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொண்டால், இன்சுலின் கணைய செல்களை உற்பத்தி செய்து, தூண்டி பாதுகாக்கிறது.
காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
டாபிக்ஸ்