தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rajma Rice : ராஜ்மா சாதம்! சூப்பரான சுவையில் ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஆரோக்கியமும் நிறைந்தது!

Rajma Rice : ராஜ்மா சாதம்! சூப்பரான சுவையில் ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஆரோக்கியமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil

May 14, 2024, 04:29 PM IST

google News
Rajma Rice : ராஜ்மா சாதம், சூப்பரான சுவையில் ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். ஆரோக்கியம் நிறைந்த இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். (vidya's vegetarian kitchen)
Rajma Rice : ராஜ்மா சாதம், சூப்பரான சுவையில் ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். ஆரோக்கியம் நிறைந்த இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Rajma Rice : ராஜ்மா சாதம், சூப்பரான சுவையில் ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். ஆரோக்கியம் நிறைந்த இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ராஜ்மா சாதம் செய்ய தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரசி – ஒரு கப்

ராஜ்மா – ஒரு கப் (ஓரிரவு ஊறவைத்தது)

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

மிளகாய்ப் பொடி – 1 ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

நெய் – 2 ஸ்பூன்

வேகவைக்காத உருளைக்கிழங்கு – பெரியதாக நறுக்கிக்கொள்ளவேண்டும்

தாளிக்க தேவையான பொருட்கள்

பட்டை – 1

கிராம்பு – 2

சோம்பு -அரை ஸ்பூன்

மராத்தி மொக்கு – 1

ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 1

கல்பாசி – கால் ஸ்பூன்

பிரியாணி இலை – 1

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

பூண்டு – 10 பல்

இஞ்சி – ஒரு இன்ச்

தக்காளி – 1

புதினா – சிறிதளவு

மல்லித்தழை – சிறிதளவு

தயிர் – 4 ஸ்பூன்

செய்முறை

ஓரிரவு ஊறுவைத்த ராஜ்மாவை குக்கரில் வைத்து தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. போதிய அளவு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, தக்காளி, புதினா, மல்லித்தழை தயிர் என அனைத்தும் சேர்த்து வழுவழுவென்று அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பெரிதா வெட்டிய வேகவைக்காத உருளைக்கிழங்களை சேர்த்து வதக்கவேண்டும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்தால், அது குழைந்துவிடும். இதுபோல் வேக வைக்காத உருளைக்கிழங்கை சேர்க்கும்போது, அது வெளியே கிறிஸ்பியாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும். சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

பின்னர், பட்டை, கிராம்பு, கல்பாசி, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை, மராத்தி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதில் இரண்டு பச்சை மிளகாயையு சேர்த்து வதக்கவேண்டும்.

மிளகாய் உங்களுக்கு காரம் வேண்டுமெனில் அதிகளவு சேர்த்துக்கொள்வேண்டும்.

இதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் என அனைத்தும் சேர்த்து நல்ல தொக்கு பதத்துக்கு சுருள வேகவேண்டும். அதேநேரத்தில் உருளையும் நன்றாக வறுபட்டிருக்கும்.

இப்போது ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். ராஜ்மா வேகவைத்த தண்ணீர் மற்றும் அரிசி ஊறவைத்த தண்ணீரையும் இதில் சேர்க்கலாம்.

தண்ணீருக்கு பதில் தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம். அது முற்றிலும் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்து கொதி வந்தவுடன், அரிசியையும் சேர்த்து அனைத்தும் கொதி வந்தவுடன் அரிசியை நன்றாக கலந்து 2 விசில் மட்டும் விட்டு இறக்கவேண்டும்.

சுவையான ராஜ்மா சாதம் தயார். இதற்கு வெங்காயம் அல்லது வெள்ளரி தயிர் பச்சடி வைத்து சாப்பிட சுவை அள்ளும்.

வெஜ் அல்லது நான் வெஜ் கிரேவிகளும் இதற்கு பொருந்தும்.

குறிப்புகள்

அரிசி கலந்தவுடன் நன்றாக கலந்துவிடவேண்டும் அப்போதுதான் அரிசி அடிபிடிக்காது மற்றும் மசாலாவின் சுவை சாதம் முழுவதிலும் பரவும்.

சீரக சம்பா அரிசி என்றால் ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர். சாதாரண பச்சை அல்லது புழுங்கல் அரிசி என்றாலும் இதே அளவு போதுமானது. பாஸ்மதி அரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு ஒன்ணேகால் கப் தண்ணீரே போதுமானது அல்லது நீங்கள் வழக்கமாக என்ன அளவு தண்ணீர் வைப்பீர்களோ அந்தளவு மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

தேங்காய் பால் சேர்ப்பது உங்கள் விருப்பம். கார அளவுக்கு ஏற்ப மிளகாய் மற்றும் மிளகாய் தூள் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி