தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து, எள்ளு மிளகாய்ப்பொடி – டிஃபனுக்கு செம்ம காம்போ - நாவில் எச்சில் ஊறும் சுவை!

திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து, எள்ளு மிளகாய்ப்பொடி – டிஃபனுக்கு செம்ம காம்போ - நாவில் எச்சில் ஊறும் சுவை!

Priyadarshini R HT Tamil
Sep 03, 2023 05:30 PM IST

Black Gram and Sesame Idly Podi : கருப்பு உளுந்து, எள்ளுப்பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இது குறிப்பாக திருநெல்வேலி ஸ்பெஷலாக உள்ளது.

கருப்பு உளுந்து, எள்ளு இட்லிப்பொடி செய்வது எப்படி?
கருப்பு உளுந்து, எள்ளு இட்லிப்பொடி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

கருப்பு எள்ளு – அரை கப்

கட்டிப்பெருங்காயம் – ஒரு சிறிய உருண்டை

வர மிளகாய் – 10 – 20 (உங்களின் கார அளவுக்கு ஏற்ப கூடுதலாகவும், குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கருப்பு உளுந்தை நன்றாக வாசம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கருப்பு எள்ளை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வர மிளகாயை நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக அலசி உலர்த்திய கறிவேப்பிலையையும் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கட்டி பெருங்காயமாக எடுத்தால் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடாயில் பொறித்து எடுத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பொடியாக பெருங்காயத்தையும் சேர்க்கும்போது அதை அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.

அனைத்தும் நன்றாக வாசம் வரும் வரை வறுப்பட்டு இருக்கும். ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். கல் உப்பாக சேர்த்தால் அரைக்கும்போதே சேர்த்துக்கொள்ள வேண்டும். தூள் உப்பு எனில் அரைத்த பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.

சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இந்த பொடியை தூவி சாப்பிட மணமும், சுவையும் அள்ளும், வயிறும் நிறையும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கருப்பு உளுந்து, எள்ளின் நன்மைகள்

கருப்பு உளுத்தம் பருப்பில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால், அவை உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்கிறது. உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து இரும்புச்சத்து ஆகும். ஏனெனில், இவை தான் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் இரும்புச் சத்து உதவுகிறது. மலச்சிக்கலை போக்குவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதில் உள்ளன.

எள்ளு, உடல் எடை குறைந்தவர்களுக்கு உதவுகிறது. எனவே உங்கள் குழந்தை உடல் எடை மெலிந்திருந்தால் அவர்களுக்கு அடிக்கடி எள்ளு பலாகாரங்கள் மற்றும் உணவுகளை செய்துகொடுங்கள். இதுபோல பொடியாக செய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு நல்லது. தினமுமே அவர்கள் உணவில் எள்ளு சேர்ந்துவிடும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். இன்னும் பல நன்மைகள் எள்ளில் உள்ளன. 

உடலுக்கு ஆற்றலும், ஆரோக்கியமும் அளிக்கும் இந்த கருப்பு உளுந்து எள்ளுப்பொடியை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்