உங்கள் டயட்டில் ராஜ்மா சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 10, 2023

Hindustan Times
Tamil

ராஜ்மாவை கிட்னி பீன்ஸ் என்றும் அழைப்பதுண்டு. மனித உடலில் இருக்கும் சிறுநீரகம் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதில் ஊட்டச்சத்து பண்புகள் அதிகமாக நிறைந்துள்ளன

ராஜ்மா சாப்பிடுதால் ரத்த கொலஸ்ட்ரால் கட்டுப்படுவதுடன், சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கும் சிறந்த உணவாக உள்ளது

காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் ராஜ்மாவில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்து ரத்த கொலஸ்ட்ராலை குறைக்கிறது

ராஜ்மாவில் குறைவான க்ளைசெமிக் குறியீடு இருப்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு நன்மை சிறந்த உணவாக உள்ளது. உடலிலுள்ள சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது

இதில் அதிக அளவிலான வைட்டமின் பி1 அறிவுசார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இறைச்சி வகை உணவுக்கான சிறந்த மாற்றாக இருக்கும் ராஜ்மாவி, இறைச்சிக்கு இணையான அளவில் புரதம் நிறைந்துள்ளது

அதிக அளவிலான மெக்னீசியம் இதயம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாரடைப்பு, இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது

கொத்தமல்லி இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்