தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் குழந்தையிடம் ஒட்ட முடியவில்லையா? நோ ப்ராப்ளம் – இதை முயன்று பாருங்கள்!

Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் குழந்தையிடம் ஒட்ட முடியவில்லையா? நோ ப்ராப்ளம் – இதை முயன்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Jul 20, 2024, 03:55 PM IST

google News
Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் குழந்தையிடம் உங்களால் நல்ல பிணைப்பை ஏற்படுத்த முடியவில்லையா? கவலை வேண்டாம். இவற்றையெல்லாம் முயன்று பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் உதவும்.
Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் குழந்தையிடம் உங்களால் நல்ல பிணைப்பை ஏற்படுத்த முடியவில்லையா? கவலை வேண்டாம். இவற்றையெல்லாம் முயன்று பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் உதவும்.

Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் குழந்தையிடம் உங்களால் நல்ல பிணைப்பை ஏற்படுத்த முடியவில்லையா? கவலை வேண்டாம். இவற்றையெல்லாம் முயன்று பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் உதவும்.

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளிடம் உங்களால் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையா? இதை முயன்று பாருங்களேன்.

டீன்ஏஜ் பருவம் என்பது குழந்தைகளுக்கு முக்கியமான பருவம். அந்த பருவத்தில்தான் குழந்தைகளின் உடல் மற்றும் மனதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. கேள்விகள் எழுகிறது. எனவே அந்தப் பருவத்தில் குழந்தைகள் தெளிவான மனநிலையில் இருக்கமாட்டார்கள். 

எனவே அவர்களுக்கு பெற்றோர் நல் வழிகாட்டியாக மட்டுமின்றி, உற்ற தோழனாகவும் இருந்து அரவணைத்துச் செல்லவேண்டும். இந்த பருவத்தில் குழந்தைகளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

நல்ல நெருக்கத்தை ஏற்படுத்துவது

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுடன் நீங்கள் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்துவது இந்த பருவத்தில் சவாலான ஒன்றுதான். ஆனால் அது தேவையானது. அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதை இங்கு தெரிந்துகொண்டு, உங்கள் டீன் ஏஜ் மகன் மற்றும் மகளுடன் மகிந்திருங்கள்.

அவர்களுக்கு பிடித்தவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளிடம் நீங்கள் நல்ல பிணைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டிய முக்கியமான மற்றும் சிறந்த வழிகளுள் ஒன்று அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்கள் விரும்பியவற்றை செய்யவைப்பது ஆகும். 

அவர்கள் விளையாட்டு, இசை, போட்டிகள், கலை என எதில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதில் அவர்கள் ஈடுபட நீங்கள் ஒத்துழைக்கவேண்டும். இது அவர்களுக்கு உங்களுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவும்.

அவர்கள் நினைப்பதை பேச அனுமதியுங்கள்

உங்கள் டீன்ஏஜ் குழந்தைக்கு, பாதுகாப்பான இடத்தை கொடுங்கள். உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் எங்கு சவுகர்யமாக உணர்கிறார்களோ, எங்கு தாங்கள் விமர்சிக்கப்படுவோம் என்ற அச்சம் இல்லையோ அங்குதான் அவர்கள் தங்களை வெளிப்படுத்துவார்கள். அவர்களை கவனித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

எப்போதும் அதை ஏற்றுக்கொண்டாலும் அதற்கு மதிப்பு கொடுப்பது மிகவும் அவசியம். அவர்களை வெளிப்படையாக பேச அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கவும் வழிவகை செய்கிறது. அவர்களை புரிந்துகொண்ட உணர்வும் கிட்டுகிறது.

கவனம், அதி கவனம்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் பேசும்போது, அதில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் பேசுவதற்கு மட்டும் முழு கவனம் கொடுங்கள். உங்களின் செல்போன்கள், டீவி போன்ற வேறு கவனச்சிதறல்களை தவிர்ப்பது கட்டாயம். 

அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதில் உண்மையான ஆர்வம் காட்டுங்கள். நீங்கள் அவர்களை உற்று கவனிக்கிறீர்கள் என்பதை தலையாட்டுவது, அவர்களின் கண்களைப் பார்த்து பேசுவது, அவர்களுக்கு பதில் கொடுப்பது ஆகிவற்றின் மூலம் நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

சுதந்திரம்

டீன் ஏஜ் வயதுடையவர்கள் சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களின் இந்த பயணத்தில் அவர்களை முடிவுகளை எடுக்க அனுமதியுங்கள்.

அவர்களை அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க அனுமதியுங்கள். இதற்கு பெற்றோராக உங்களின் கடமையை கைவிடுவது என்பது அர்த்தமல்ல. ஆனால் நீங்கள் சுதந்திரமும் கொடுக்கவேண்டும். அதே நேரத்தில் வழிகாட்டவும் வேண்டும். இரண்டையும் சமநிலையில் வைத்திருக்கவேண்டும்.

அவர்களின் பணிகளை புரிந்துகொள்ளுங்கள்

டீன் ஏஜ் வயதுடையவர்களுக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கும். அவர்கள் எப்போதும் தங்களை பிசியாக வைத்திருப்பார்கள். அவர்கள் தங்களின் பள்ளி நாட்கள் மற்றும் கூடுதல் வகுப்புக்கள் இரண்டுக்கும் சமமாக நேரம் செலவிடவேண்டும். அவர்களின் சமூக வாழ்வும் இதனால் பாதிக்கப்படக் கூடாது. 

அவர்களின் அன்றாட வழக்கம் மற்றும் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் இரண்டையும் புரிந்துகொள்ளுங்கள். இது அவர்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை காட்டுவது மட்டுமல்ல, இது அவர்களுடன் நாம் சரியான நேரத்தில் தொடர்பில் இருக்கிறோமா என்பதையும் அடையாளம் காண உதவும்.

அவர்களின் நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள்

டீன்ஏஜ் குழந்தைகளுக்கு நண்பர்கள் மிகவும் அவசியம். அவர்களின் சமூக வளர்ச்சிக்கு அதுதான் மிகவும் தேவையான ஒன்று எனவே அவர்களின் நண்பர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். நமது வீட்டுக்கு அவர்களின் நண்பர்களை அழைப்பது மற்றும் அவர்களின் வீட்டுக்கு அனுப்புவது, என அவர்களின் சமூக வட்டம் விரிவடைய நமக்கு இது உதவும்.

எல்க்ட்ரானிக் வாழ்க்கை

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் இடையூறுகள் இந்த கால டீன் ஏஜ் குழந்தைகளின் வாழ்க்கையில் பின்னிபிணைந்தவையாக இருக்கின்றன. இந்த மாற்றத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதைவிட, டிஜிட்டல் வாழ்க்கை முறையை ஏற்க புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் ஆன்லைன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், திரை நேரத்துக்கும், ஆன்லைன் பயன்பாட்டுக்கும் ஒரு அளவு இருப்பது எப்போதும் அவசியம்.

அவர்களின் எல்லைகள் குறித்து உரையாடுங்கள்

எல்லைகள் என்பது மிகவும் முக்கியம். ஆனால் அவர்களின் எல்லைகள் குறித்து உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளிடம் பேசுவது மிகவும் அவசியம். அவர்களுக்கு தேவையான விதிகள் வீட்டில் கட்டாயம் வகுக்கப்படவேண்டும். 

இந்த அணுகுமுறையால், அவர்களுக்கு மரியாதை ஏற்படும். அவர்களுக்கும் மதிப்பு கொடுத்த உணர்வை இது ஏற்படுத்தும். மேலும் அவர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க இது அவர்களை ஊக்குவிக்கும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி