Parenting Tips : உங்களிடம் இந்த குணங்கள் இருந்தால்தான் நீங்கள் சிறந்த பெற்றோர்! என்னவாக இருக்கும் என்று பார்க்கலாமா?
- Parenting Tips : உங்களிடம் இந்த குணங்கள் இருந்தால்தான் நீங்கள் சிறந்த பெற்றோர்! என்னவாக இருக்கும் என்று பார்க்கலாமா?
- Parenting Tips : உங்களிடம் இந்த குணங்கள் இருந்தால்தான் நீங்கள் சிறந்த பெற்றோர்! என்னவாக இருக்கும் என்று பார்க்கலாமா?
(1 / 10)
சிறந்த பெற்றோர் - ஒரு சிறந்த பெற்றோர் என்பவர்கள் குழந்தைகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்ல, அவர்களை நல் முறையில் வளர்த்து, வழிகாட்டி, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பவர்கள்தான் சிறந்த பெற்றோர் ஆகிறார்கள். சிறந்த பெற்றோருக்கான குணங்களாக பின்வருபவை குறிப்பிடப்பட்டுள்ளன.
(2 / 10)
நிபந்தனையற்ற அன்பு - சிறந்த பெற்றோர் எப்போது நிபந்தனையற்ற அன்பை வழங்குபவராக இருப்பார். உங்கள் குழந்தைகளை மதிப்பவராகவும், அவர்களின் சாதனைகள் கொண்டாடுபவர்களாகவும், நடவடிக்கைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
(3 / 10)
நன்றாக கவனிப்பது - உங்கள் குழந்தைகளின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் தேவைகள் குறித்து நன்றாக உற்று கவனிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் திறந்த உரையாடல்களை நிகழ்த்தி, நம்பிக்கையை வளர்த்துக்கொள்வார்கள்.
(4 / 10)
பொறுமை - சவாலான நேரங்களை கையாள்வதில் சிறந்த பெற்றோர் பொறுமையை கடைபிடிக்கிறார்கள். அவர்கள் சவாலான சூழல்களில் அமைதியுடன் நடந்துகொள்கிறார்கள். சிந்தித்து செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு நிலையான மற்றும் ஆதரவான சூழலை அமைத்துக்கொடுக்கிறார்கள்.
(5 / 10)
நிலைத்தன்மை - நிலையான விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குழந்தைகள் தங்களின் எல்லைகளை புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் அவர்கள் பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.
(6 / 10)
அனுதாபம் - குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்வதும், பகிர்ந்துகொள்வதும் ஒரு சிறந்த பெற்றோரின் முக்கிய கடமையாகும். சிறந்த பெற்றோர், அவர்களுக்கு சவுகர்யங்களை வழங்குகிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் சோகமான தருண்ங்கள் என இரண்டிலும் அவர்கள் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறார்கள்.
(7 / 10)
ஊக்கப்படுத்துதல் - குழந்தைகளின் ஆர்வம் மற்றும் விருப்பங்களை சிறந்த பெற்றோர்கள் எப்போது ஊக்குவிக்கிறார்கள். அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை வழங்குகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஊக்கமளித்து, உற்சாகப்படுத்துகிறார்கள்.
(8 / 10)
ரோல் மாடல் - நேர்மறையான நடவடிக்கைகளை குழந்தைகள் பின்பற்றவேண்டும் என்று ஒரு பெற்றோர் எதிர்பார்த்தால், அதற்கு பெற்றோர்கள் நேர்மறை எண்ணங்களை வைத்திருக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் பொறுப்புடன் நடக்கவும், அறத்தின் வழியைப் பின்பற்றவும் வழிகாட்டியாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர்தான் சிறந்த ரோல் மாடலாக இருக்கவேண்டும்.
(9 / 10)
ஏற்கும் திறன் - ஒரு சிறந்த பெற்றோர், எதையும் ஏற்பவராகவும், நெகிழ்தன்மை கொண்டவராகவும் இருக்கவேண்டும். அவர்களின் பேரன்டிங் ஸ்டைலை அவர் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளவேண்டும். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப செய்ய வேண்டிய மாற்றங்களையும் செய்யவேண்டும்.
(10 / 10)
எப்போதும் ஆதரவு தரவேண்டும் - பெற்றோர்கள்தான் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள், உதவுகிறார்கள். எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார்கள். குழந்தையை எந்த சூழலிலும், ஆதரிப்பவராகவும், விட்டுக்கொடுக்காதவராகவும் இருக்கவேண்டும்.
மற்ற கேலரிக்கள்