Encounter: ஆம்ஸ்ராங் கொலை! என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உடல் ஒப்படைப்பு.. அண்ணாமலையின் அடுக்கடுக்கான கேள்விகள்!
Encounter : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனை மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நள்ளிரவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை அவரது உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓட முயன்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டன் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திருவேங்கடம் உடல் பிரேத பரிசோதனை மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நள்ளிரவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை அவரது உடல் திருவேங்கடத்தின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திருவேங்கடத்தின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
அண்ணாமலை கேள்வி
இந்நிலையில் இன்று சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூலிப்படை என்பது வெட்டிவிட்டு போகும் படை. இந்த கூலிப்படையை ஏவி விட்டது யார்? இதற்கு பணம் சப்போர்ட் செய்தது யார்? இதற்கு மூளை யார்? இவரைக் கொன்றால் பணம் கிடைக்கும் என்று யார் கொன்றார்கள். இதை கண்டுபிடிக்க தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். திருவேங்கடத்தை ஏவி விட்டவர்கள் யார் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்பதை பாஜகவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்
