Queen Rasis: பிள்ளை பருவத்தில் இருந்தே மகாராணியாக வாழக்கூடிய ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி பிறப்பிலேயே மகாராணியாக வாழக்கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனித்துவத்தைப் பெற்று இருப்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு கிரகங்களை அதிபதியாக கொண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களும் செயல்படுவார்கள்.
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் மாற்றத்தால் அவ்வப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். ஆனால் இயல்பிலேயே சில ராசிக்காரர்கள் சில குணாதிசயங்களை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே பெண்கள் ராஜ வாழ்க்கை யோகம் பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
மனம் தளராத தைரிய குணாதிசயம் கொண்ட பெண்கள் இவர்கள். பயமின்றி ஆர்வத்தோடு எந்த செயலிலும் ஈடுபடுவார்கள். அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வழிநடத்தக்கூடிய திறன் கொண்டவர்கள். இயற்கையாகவே இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதனால் எப்போதும் மகாராணி போல் வாழ்வார்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய குணாதிசயம் கொண்டவர்கள். அவர்களின் நம்பிக்கை மற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தும். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அவர்கள் ராணியாக வாழ்வார்கள்.
மகர ராசி
மன உறுதியில் என்றும் அசைக்க முடியாத திடமான பெண்களாக மகர ராசிக்காரர்கள் இருப்பார்கள். தான் செய்யும் வேலையில் எப்போதும் நெறிமுறைகளை சரியாக கடைபிடிப்பார்கள். மகாராணி வாழ்க்கை வாழக்கூடிய ராசிக்காரர்களின் இவர்களும் ஒருவர்.
துலாம் ராசி
பிறந்ததிலிருந்தே துலாம் ராசியில் பிறந்த பெண்கள் ராஜயோகம் பெற்றவர்கள். உண்மை மீது தீவிர உணர்வு கொண்டவர்கள். ராஜதந்திர சிந்தனையில் இவர்களை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.
விருச்சிக ராசி
மற்றவர்களை ஈர்க்கும் கவர்ச்சி தன்மை எப்போதும் இவர்களின் குணாதிசயங்களில் உண்டு. மற்றவர்களை வசீகரிக்க கூடிய செல்வாக்கு எப்போதும் இவர்களுக்கு உண்டு. இவர்களின் திறமை கண்டு பலரும் பிரமித்து நிற்பார்கள். ஆளுமைத் திறனோடு எப்போதும் செயல்படுவார்கள்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் உள்ளன தேவை இருப்பின் சரியான நிபுணரை அனுப்பி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்