தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ola Electric Car: ஃபுல் சார்ஜ் செய்தால் 500கிமீ போகுமா!

Ola electric car: ஃபுல் சார்ஜ் செய்தால் 500கிமீ போகுமா!

Aug 16, 2022, 11:28 AM IST

புதிதாக வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனங்களில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகளைத் தொடங்கியது.

ட்ரெண்டிங் செய்திகள்

Idly Dosa Batter : வயிறு முதல் குடல் வரை உள்ள புண்கள் குணமாகவேண்டுமா? இட்லி மாவு இப்டி மட்டும் அரைங்க போதும்!

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

Gongura Pachadi : வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் புளிச்ச கீரை பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

அதேசமயம் புதிய தொழில்நுட்பத்துடன் அதிவேக திறன் கொண்ட எலக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கி வருவதாக ஓலா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறுகையில்," இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் இருக்கும் கார்களில் தலை சிறந்த ஸ்போர்ட்ஸ் காராக இருக்கும். மேலும் 100 கிமீ வேகத்தை நான்கு நொடிகளில் கடந்து விடும். ஒருமுறை இந்த எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிமீ வரை செல்லும்.

மேலும் இந்த காரில் டிராக்-கோ எபிஷியன்ட் மற்றும் ஆல் கிளாஸ் ரூஃப் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மூவ் ஓஸ் என்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த ஓஎஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் சிறப்பான டிரைவிங் திறன்களைக் கொண்டுள்ளது.

மற்ற கார்களில் இல்லாத வகையில் சிறப்பான டிசைன், மிகச்சிறந்த புதிய தொழில்நுட்பம், சிறப்பான செயல் திறன் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த கார் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் குறித்து முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.