தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேதம் அறிவுறுத்துவது இதைத்தான்!

Morning Quotes : நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேதம் அறிவுறுத்துவது இதைத்தான்!

Priyadarshini R HT Tamil

Oct 04, 2024, 05:43 AM IST

google News
Morning Quotes : நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேதம் அறிவுறுத்துவது என்ன என்பதை பாருங்கள்.
Morning Quotes : நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேதம் அறிவுறுத்துவது என்ன என்பதை பாருங்கள்.

Morning Quotes : நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேதம் அறிவுறுத்துவது என்ன என்பதை பாருங்கள்.

நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமெனில் நீங்கள் எப்படி உணவு உட்கொள்ளவேண்டும் என்று ஆயுர்வேதம் 8 விதிகளை வகுத்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். ஆயுர்வேதம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கும் ஒரு மருத்துவ முறையாகும். ஆயுர்வேதம் உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்களின் ஆற்றல் அளவை சமப்படுத்தி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கும் ஒருசில வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. இவற்றை நீங்கள் உணவு உட்கொள்ளும்போது கடைபிடிக்கவேண்டும். ஆயுர்வேதம் உங்களுக்குக் கொடுக்கும் முக்கிய விதிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு உணவு உண்ண 8 விதிகளை ஆயுர்வேதம் வகுத்துள்ளது.

70-80 சதவீத உணவு

நீங்கள் அன்றாட உணவு உட்கொள்ளும்போது 70 முதல் 80 சதவீதம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வயிறு முட்ட, முட்ட சாப்பிடக்கூடாது. அது எத்தனை சுவை நிறைந்த உணவாக இருந்தாலும், 80 சதவீத வயிறு நிறைந்தவிட்டதாக இருப்பதை உணர்ந்தாலே சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும். அதிகம் சாப்பிட்டால் அது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இது உங்களுக்கு வயிறு உப்புசம், அசவுகர்யம், மந்தநிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். உங்கள் வயிற்றில் சிறிது இடம் இருக்கவேண்டும். அப்போதுதான் செரிமானம் சிறப்பாக நடைபெறும்.

மதிய உணவு சிறப்பாக இருக்கவேண்டும்

ஆயுர்வேதத்தின்படி செரிமானத்துக்கு சூரியனின் சக்தி தேவை. எனவே சூரியன் உச்சத்தில் இருக்கும்போது, குறிப்பாக 12 முதல் 2 மணி வரை, உடலால் அதிக உணவை செரிக்க முடியும். எனவே உங்களின் மதிய உணவுதான் நன்றாக இருக்கவேண்டும். அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கவேண்டும். அது உங்கள் உடலுக்கு ஆற்றலைத்தரும்.

பின்னிரவு உணவு

பின்னிரவில், 12 மணிக்கு மேல் இரவு உணவை எடுத்துக்கொள்ளாதீர்கள். இது உங்களின் இயற்கை செரிமான வேலைகளை பாதிக்கும். ஆயுர்வேதத்தின்படி நீங்கள் இரவு உறங்கச்செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரம் முன்னர் சாப்பிடவேண்டும். இரவு உணவை 7 மணிக்குள் உட்கொள்ள வேண்டும். இரவு தாமதமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். அமிலம் சுரப்பது மற்றும் தரமற்ற உறக்கத்தை ஏற்படுத்தும்.

வீணான உணவு

எந்த உணவும், ஒரு நாளைக்கு மேல் இருந்தால் அது கெட்டுப்போன உணவாகப் பார்க்கப்படுகிறது. அதை நீங்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். இது உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்காது. உடல் செரிக்க சிரமப்படும். பேக்கிங் உணவு அல்லது பழைய உணவு சுடவைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். அந்த உணவு நஞ்சாகி உங்கள் வயிற்றிலே தங்கி, உங்களின் செரிமான மண்டலத்தை குலைக்கும்.

நல்ல செரிமானத்துக்கு சூடான உணவுகள்

உங்களுக்கு நல்ல செரிமானம் கிடைக்கவேண்டுமெனில், சூடான மற்றும் சுவையான உணவுகளை சாப்பிடவேண்டும். பச்சையான அல்லது ஆறிய உணவுகள் உங்களுக்கு செரிக்க தாமதமாகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சூடான உணவுகள், உங்களின் செரிமான மண்டலத்தைக் காக்கும். உங்கள் உடல் உணவை உடைக்க உதவும். ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச நல்லது.

விரதம்

உங்களின் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு விரதம் இருப்பது நல்லது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மாதத்தில் ஒரு நாள் விரதம் இருக்கவேண்டும். செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டால், உணவைத் தவிர்த்தல் அல்லது விரதம் இருந்து உடலுக்கு சிறிய ஓய்வு கொடுத்தால், அந்த உறுப்பு சுத்தமடைந்துவிடும். மாதத்தில் ஒரு நாள் 12 மணி நேர விரதம் இருக்கலாம்.

சாப்பிடுவதில் கவனம்

நீங்கள் சாப்பிடும்போது எவ்வித இடையூறுகளும் இருக்கக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். மேலும் உணவை நன்றாக மென்று ரசித்து, ருசித்து சாப்பிடவேண்டும். டிவி அல்லது ஸ்மார்ட் ஃபோன்களை பார்த்துக்கொண்டு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

சாப்பிடும் முன் தண்ணீர், சாப்பிடும்போது அல்ல

ஆயுர்வேதத்தின்படி நீங்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னர் தண்ணீர் பருகவேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் பருகக்கூடாது. அது செரிமான எண்சைம்களை நீர்த்துப்போகவ் செய்து, உங்கள் செரிமான மண்டலத்தை பாதிக்கும். சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்னர் தண்ணீர் பருகுவது உங்கள் வயிறை செரிமானத்துக்கு தயாராக்கும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி