Vastu Tips: உங்கள் வீட்டின் வாசல் கதவு இப்படி இருக்கிறதா? தரித்திரம் உறுதி! சக்தியை தரும் வாஸ்து டிப்ஸ் இதோ!-vastu for prosperity entrance door rules to attract wealth and happiness - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: உங்கள் வீட்டின் வாசல் கதவு இப்படி இருக்கிறதா? தரித்திரம் உறுதி! சக்தியை தரும் வாஸ்து டிப்ஸ் இதோ!

Vastu Tips: உங்கள் வீட்டின் வாசல் கதவு இப்படி இருக்கிறதா? தரித்திரம் உறுதி! சக்தியை தரும் வாஸ்து டிப்ஸ் இதோ!

Kathiravan V HT Tamil
Sep 28, 2024 07:57 PM IST

Vastu Tips: வீட்டின் பிரதான நுழைவாயிலில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. பிரதான கதவை திறந்து உள்ளே செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் வாஸ்து விதிகள் பல்வேறு வழிமுறைகளை விளக்குகின்றது.

Vastu Tips: உங்கள் வீட்டின் வாசல் கதவு இப்படி இருக்கிறதா? தரித்திரம் உறுதி! சக்தியை தரும் வாஸ்து டிப்ஸ் இதோ!
Vastu Tips: உங்கள் வீட்டின் வாசல் கதவு இப்படி இருக்கிறதா? தரித்திரம் உறுதி! சக்தியை தரும் வாஸ்து டிப்ஸ் இதோ!

வாஸ்து சாஸ்திரமும் நேர்மறை ஆற்றலும்!

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை நோக்கம், மனிதர்களும் இயற்கையும் ஒற்றுமையாக இணைந்து வாழும் ஒரு சூழலை உருவாக்குகிறது என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது. வாஸ்து சாஸ்திரம் என்பது உடல் நலம், மன அமைதி, பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வாஸ்து காரணமாக அமைகின்றது. வாஸ்து விதிகளை பின்பற்றுவது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரும் என்பது நம்பிக்கை.

வீட்டின் பிரதான நுழைவாயிலில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. பிரதான கதவை திறந்து உள்ளே செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் வாஸ்து விதிகள் பல்வேறு வழிமுறைகளை விளக்குகின்றது. 

வீட்டின் பிரதான கதவு தொடர்பான வாஸ்து குறிப்புகள்:

வாஸ்து படி, பிரதான நுழைவாயிலின் முன் ஸ்டோர் ரூம், வாட்ச்மேன் கேபின் அல்லது குப்பைத் தொட்டி போன்றவை இருக்க கூடாது.

பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் ஒரு பெரிய தூண் இருப்பது நல்லது அல்ல. இது குடும்ப உறுப்பினர்கள், வணிக கூட்டாளிகள் இடையே பிரச்னைகளையும், தடைகளையும் உண்டாக்கும். 

பிரதான நுழைவு வாயில் முன்பு செப்டிக் டேங்க், போரிங் போன்றவை இருக்கக் கூடாது. இதன் காரணமாக குறித்த நபர் நிதி சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

வாயிலின் பிரதான கதவை திறக்கும் போதும் மூடும் போதும் சத்தம் கேட்கக்கூடாது. இத்தகைய ஒலிகள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வாஸ்து படி வீட்டின் நீளம் அல்லது அகலத்தின் நடுவில் பிரதான கதவு சரியாக அமையக்கூடாது. அது வீட்டின் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும்.

வாஸ்துவில், பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் எங்கிருந்தோ அல்லது பிற இடங்களிலிருந்து தண்ணீர் சொட்டுவது நல்ல அறிகுறியாகக் கருதப்படுவதில்லை.

வாஸ்துவில் இரண்டு வீடுகளின் ஒரே பிரதான நுழைவாயில் இருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner