Morning Quotes : அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்! இத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா?
Sep 16, 2024, 05:45 AM IST
Morning Quotes : அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்! இத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் எனில் நாளை முதல் முயற்சித்து பாருங்களேன்.
நீங்கள் அதிகாலையிலே எழுந்துவிடுவது உங்களுக்கு எத்தனை நன்மைகளை தருகிறது என்று பாருங்கள். மேலும் நீங்கள் அதிகாலையிலே ஏன் எழுந்திருக்கவேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர், அதிகாலையில் துயில் எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பரிசோதித்து வேண்டுமானால் பார்க்கலாம். அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு பல உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். விடிந்து நீண்டநேரம் வரை படுக்கையில் படுத்திருப்பது என்பது நல்லதல்ல. நீங்கள் அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் இனிமேல் தினமும் அதிகாலையில் கண் விழித்துவிடுவீர்கள். அதிகாலை துயில் எழுபவர்களுக்கு அந்த ஒரு நாள் இரண்டு நாளுக்கு சமம். நீங்கள் அத்தனை வேலைகளை செய்து முடித்துவிடலாம்.
அமைதியான, பரபரப்பில்லாத காலைப்பொழுது
காலைப்பொழுது எப்போதும் அமைதியுடனும் பரபரப்பின்றியும் இருக்கும். நீங்கள் அதிகாலையில் துயில் எழுந்துவிட்டீர்கள் என்றால் போதும் எவ்வித அவசரமும் இல்லாமல் உங்கள் நாளை துவங்கலாம். மெதுவாக, அமைதியான காலைப் பொழுதுகள், உங்களின் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு வேலைகள் குறித்து பரபரப்பாக்காமல் பதற்றத்தைe குறைக்க உதவுகிறது.
நடைப்பயிற்சியுடன் உங்கள் நாளை துவங்குங்கள்
காலையில் எழுந்து நடை பயிற்சி செய்வது, குறிப்பாக காலையில் வெளியில் சென்று நடைப்பயிற்சி செய்வது உங்களுக்கு ஆற்றலை வழங்கும் சிறந்த வழிகளுள் ஒன்று. உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரக்கூடியது. நீங்கள் நடக்கும்போது எண்டோஃபின்கள் வெளிப்படுத்தப்படும். அவை உங்களின் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும். அதிகாலையில் துயில் எழுந்து உடற்பயிற்சி செய்பவர்கள், காலையில் வேலைகளில் எளிதாக ஒட்டிக்கொள்வார்கள். அது அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமான காலை உணவு
நீங்கள் அதிகாலையில் எழுந்துவிடுவது உங்களுக்கு காலை உணவு தயாரிக்கவும், அதை பொறுமையாக சாப்பிட்டு மகிழவும் நிறைய நேரத்தைத்தரும். காலையில் சரிவிகித உணவு உட்கொள்பவர்களுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
பகல்நேர சூரிய ஒளி
நீங்கள் அதிகாலையில் எழுந்துவிட்டால், உங்களுக்கு காலை நேர சூரிய ஒளியை அதிகளவு எடுக்கும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் இந்த இயற்கை ஒளியில் இருக்கும்போது, அது உங்கள் உடலின் உறக்கம்-விழிப்பு சுழற்சியை முறையாக வேலை செய்ய வைக்கும். அவர்கள் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள். அவர்களின் உறக்கம் சிறப்பாக அமையும். ஏனெனில் அவர்களுக்கு இயற்கை ஒளி கிடைக்கிறது.
மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
மன ஆரோக்கியத்துக்கு அதிகாலையில் துயில் எழுவதால் எண்ணற்ற பலன்கள் கிட்டும். பதற்றம், பயம், மற்றும் மனஅழுத்தம் ஆகிய அனைத்தும் அதிகாலையில் துயில் எழுபவர்களிடம் குறைவாக இருக்கும். உங்களின் நாளை அதிகாலையிலே துவங்குவது மற்றும் உங்களுக்கு பலவேலைகளை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எழுதலாம், தியானம் செய்யலாம். உங்கள் மனதை தெளிவாக்கும் காரியங்களில் ஈடுபடலாம். உங்களின் உணர்வு நிலையை அதிகரிக்கச் செய்யும்.
உறக்கம்-விழிப்பு சுழற்சி இயற்கையாக இருக்கும்
உங்களின் உறக்கம் – விழிப்பு சுழற்சி, உங்கள் உடலின் உள்புறம் உள்ள கடிகாரம், ஒளி மற்றும் இருளால் தூண்டப்படுபவை. அவைதான் இருளில் உறங்க வைக்கும். ஒளியில் விழிக்க வைக்கும். நீங்கள் அதிகாலையில் துயில் எழுவது, உங்களின் உறக்கம் – விழிப்பு சுழற்சியை முறையாக இயங்க வைக்கும் ஒன்றாக இருக்கும்.
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்
உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் நீங்கள் அதிகாலையில் துயில் எழும்போது சிறப்பாகும் என்பது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு ஒரு அழகான வாழ்க்கை முறை இருக்கும். அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களாகவும், சரிவிகித உணவு உட்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இது உண்மையில் அவர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்யும்.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு நிறைய நேரம் கிடைக்கும்
உங்கள் நாளை நீங்கள் அதிகாலையில் இருந்து துவங்கினால், உங்களுக்கு அந்த நாளில் அதிக நேரம் இருப்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். இதனால் உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைப்பதுபோல் இருக்கும். அதிகாலைகள் உங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நீங்கள் செய்யும் பணியில் கவனம் செலுத்த உதவும். எனவே நீங்கள் உங்கள் வேலைகள் அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ளலாம்.