Relationship : ‘உறவுகள் தொடர் கதை’ காதல் உறவில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன?-relationship relationship series story what are the common mistakes you must avoid in a romantic relationship - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : ‘உறவுகள் தொடர் கதை’ காதல் உறவில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன?

Relationship : ‘உறவுகள் தொடர் கதை’ காதல் உறவில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன?

Sep 14, 2024 12:57 PM IST Priyadarshini R
Sep 14, 2024 12:57 PM , IST

  • Relationship : ‘உறவுகள் தொடர் கதை’ காதல் உறவில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன?

உரையாடல் குறைவது - முக்கிய உரையாடல்கள் குறைவது அல்லது தவிர்ப்பது உங்கள் உறவை பாதிக்கும். எனவே உங்கள் பார்ட்னருடன் ஆரோக்கியமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடல் அவசியம். எனவே சில அணுகுமுறைகளை நீங்கள் அமைதியாகச் செய்யவேண்டும். இது இருவருக்கும் இடையே நல்ல சூழலை வளர்த்தெடுக்கும். இதனால் இருவருக்கும் புரிந்துகொள்ளவும், உணர்ந்துகொள்ளவும் வாய்ப்பு அமையும். இது உங்களின் பிணைப்பை அதிகரித்து, நீங்கள் அதிகம் கவனித்து, பகிர்ந்துகொள்ள உதவும்.

(1 / 10)

நம்பிக்கை இழப்பு - தொடர் சந்தேகம் மற்றும் தன்னுடைய உடைமை என்ற எண்ணம் உறவை பாதிக்கும் ஒன்றாகும். எனவே அவர்களுக்கு போதிய இடம் கொடுப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்து எடுக்கவேண்டும். திறந்த உரையாடலை வளர்த்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் நம்பத்தன்மையை அதிகரித்துக்கொள்ளவேண்டும். தொடர் செயல்கள் மற்றும் நம்பிக்கைதான் தொடர்ந்து வலுவான மற்றும் பாதுகாப்பான உறவுக்கு உத்ரவாதம் கொடுக்கிறது.

(2 / 10)

தரமான நேரத்தை தவிர்ப்பது - இருவருக்குமே பரபரப்பான வேலைகள் இருக்கும். இதனால் உங்கள் உறவில் பிணைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படலாம். ஒன்றாக சேர்ந்திருக்கும் நேரத்தை திட்டமிட்டுக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இதற்கு தீர்வாகும். எனவே நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் அவசியம். அது உங்களிடையே உணர்வு ரீதியான தொடர்பை அதிகரிக்க உதவும். மீண்டெழும் மற்றும் ஆத்மார்த்தமான உறவுக்கு வாழ்க்கை முறை சவால்கள் தடையாக இருப்பதை தவிர்க்க உங்கள் பார்ட்னருடன் நீங்கள் செலவிடும் தரமான நேரம் உதவும்.

(3 / 10)

ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக்கொள்வது - எந்த வித உணர்ச்சி அல்லது முகபாவ வெளிப்பாடும் இல்லாமல் பாராட்டுவது தவிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும். இதை எதிர்க்க உங்களின் நன்றியை அடிக்கடி தெரிவிக்க வேண்டும். உங்கள் பார்ட்னரின் முயற்சிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். சிறிய, நல்ல சைகைகளை நீங்கள் உங்கள் பார்ட்னருக்கு வழங்கிக்கொண்டே இருக்கும்போது அது உங்களின் அன்பு மற்றும் அங்கீகாரத்தை காட்டுகிறது. இதனால் உங்கள் உறவு மேம்படுகிறது.

(4 / 10)

தனிப்பட்ட வளர்ச்சியை தவிர்த்தல் - தனிப்பட்ட வளர்ச்சியை தவிர்ப்பது உறவுகளின் பாதிக்கும். எனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட இலக்குகளுக்கும், வளர்ச்சிக்கும் அதை நோக்கி நீங்கள் செல்வதற்கும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவேண்டும். உற்ற துணை இருந்தால், நீங்கள் உங்களின் இலக்குகளை நோக்கி எளிதாக ஓட முடியும். ஒவ்வொருவரின் வெற்றியையும் கொண்டாடும்போது, உங்களின் மகிழ்ச்சி பகிரப்படுகிறது. முமுமையான உணர்வு கிடைக்கிறது.

(5 / 10)

தேவையற்ற எதிர்பார்ப்புகள் - ஒருவரே உணர்வு ரீதியான தேவைகள் அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது உண்மையாகாது. எனவே இதை அங்கீகரிக்க நீங்கள் உண்மை எதிர்பார்ப்புகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல அணுகுமுறை வேண்டும். இது இருவரின் நலனையும் பாதுகாக்கிறது.

(6 / 10)

சண்டைகளை தவிர்த்தல் - சண்டைகள் தீர்க்கப்படாமல் விட்டால், அதை இருத்தி வைத்துக்கொண்டால் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே சண்டைகளை நான் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ளவேண்டும். ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொள்வதைவிட தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அமைதியாக இருக்கவேண்டும். திறந்த உரையாடல் சண்டைகளை வாய்ப்புகளாக்கி, வளர்ச்சியை புரிந்துகொள்ள உதவும். உறவுகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும்.

(7 / 10)

பொருளாதார மேலாண்மை - பொருளாதாரம் தொடர்பான உரையாடல்களை தவிர்த்தால், அது உங்களின் நிலைத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நீங்கள் பொருளாதார இலக்குகளை திட்டமிடும்போது தெளிவான உரையாடல் வேண்டும். இருவரும் சேர்ந்து பொருளாதார பிரச்னைகளைக் கையாள வேண்டும். வெளிப்படையான உரையாடல் உங்கள் உறவில் பொருளாதார நலனுக்கு நிலையான அடித்தளம் அமைக்கிறது.

(8 / 10)

மற்றவர்களுடன் ஒப்பீடு - மற்றவர்களுடன் அனைத்து வகையிலும் ஒப்பிடக்கூடாது. அது உறவில் விரிசல் ஏற்பட காரணமாகும். ஒவ்வொருவரும் தனித்தனியானவர் என்பதை முதலில் நினைவில்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. ஒவ்வொருவருக்கும் தனி குணம் உண்டு. எனவே யாருடனும் ஒப்பிட்டு, குறைத்து மற்றும் அதிகரித்து மதிப்பிட்டுக்கொள்ளக் கூடாது. இது உறவின் அமைதியைக் கெடுக்கும்.

(9 / 10)

எந்த ஒரு உறவிலும் நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகள்தான் உங்கள் வாழ்வையே புரட்டிபோட்டுவிடும். அவை என்னவென்று தெரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். நம்மைச்சுற்றி நல்ல உறவுகளைப் பேணுவது மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் உறவுகள்தான் நமக்கு உருகொடுப்பவையாகவும், உருவாக்குபவையாகவும் இருக்கும். ஆரோக்கியமான உறவுகளுக்கு விழிப்புணர்வு மற்றும் முயற்சிகள் தேவை. உறவில் நீங்கள் தவிர்க்கவேண்டிய பொதுவான தவறுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை தெரிந்துகொண்டு, தேவையற்ற சஞ்சலங்களை தவிர்த்து உறவுகள் மேம்பட வழிவகுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உறவுகளும், சுற்றமும் சூழ வாழ்வதே வாழ்வு. தனிமை தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளவேண்டியது மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட இவை உங்களுக்கு உதவும்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்