Top 10 Benefits of Pomegranate : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அதிகரிக்க என பல நன்மைகளுக்கு இந்த ஒரு பழம் போதும்!-top 10 benefits of pomegranate this one fruit is enough for many benefits such as heart health increasing immunity - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 10 Benefits Of Pomegranate : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அதிகரிக்க என பல நன்மைகளுக்கு இந்த ஒரு பழம் போதும்!

Top 10 Benefits of Pomegranate : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அதிகரிக்க என பல நன்மைகளுக்கு இந்த ஒரு பழம் போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 15, 2024 10:43 AM IST

Top 10 Benefits of Pomegranate : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அதிகரிக்க என பல நன்மைகளுக்கு இந்த ஒரு பழம் போதும். இதன் முத்துக்கள் உங்கள் ஆரோக்கியத்தின் சொத்துக்கள் ஆகும். அது என்ன பழம் என்ற தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Top 10 Benefits of Pomegranate : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அதிகரிக்க என பல நன்மைகளுக்கு இந்த ஒரு பழம் போதும்!
Top 10 Benefits of Pomegranate : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அதிகரிக்க என பல நன்மைகளுக்கு இந்த ஒரு பழம் போதும்!

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

மாதுளையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள புனிகாலாஜின்கள் மற்றும் ஆந்தோசியானின்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. அது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குகிறது. வயோதிகத்தை தாமதமாக்குகிறது.

இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது

மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதயத்துக்கு செல்லும் ரத்த அளவை அதிகரிக்கிறது. தமனிகளில் வீக்கத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இதயநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

மாதுளையில் சாறு பிழிந்து பருகினால் அதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். அது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது

மாதுளையில் வலுவான வீக்கத்துக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளன. அது உங்கள் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது உங்கள் உள்ள நாள்பட்ட வீக்கத்தைப் போக்குகிறது. நாள்பட்ட வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்தது. இது ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

மாதுளையில் வைட்டமின் சி மற்றும் மற்ற நோய் எதிர்ப்பு உட்பொருட்கள் அதிகம் உள்ளது. மாதுளை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. உங்கள் உடல் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. நோய்களை திறம்பட குணப்படுத்த உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

மாதுளையில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது சருமம் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. மாசு, யூவி கதிர்கள் மற்றும் ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் இளமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ரத்த அழுத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மாதுளை, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சிஸ்டோலிக் அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை நன்மைகளைத் தருகிறது.

நினைவாற்றலை அதிகரிக்கிறது

மாதுளை உட்கொள்வதை நீங்கள் வழக்கமாக்கினால், அது உங்களின நினைவாற்றல் மற்றும் மூளையில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் அதற்கு உதவுகிறது.

மூட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மாதுளையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. குறிப்பாக மூட்டுகளில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.

எடை மேலாண்மை

கலோரிகள் குறைவான மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளது. மாதுளை வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இது உங்களின் பசியை கட்டுப்படுத்தும். உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.