‘கண்னே, ராஜா, கண்மணி’ பிரிட்டிஷ் இலக்கியங்களில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு வித்யாசமான செல்லப்பெயர்கள்!
Dec 14, 2024, 12:47 PM IST
பிரிட்டிஷ் இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
காலத்தால் அழியாத இந்த கேரக்டர்களின் பெயர்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நிக் நேம்களாக இதை வைத்து மகிழுங்கள். அவர்களுக்கு இது வித்யாசமான லுக்கைக் கொடுக்கும்.
பெர்சி
பெர்சி என்றால், சாதிக்க துடிக்கும் நபர் என்று பொருள். வீரமிக்கவர் என்ற அர்த்தத்தைத் தரும். இந்த மார்டன் நிக் நேம்கள், உங்கள் குழந்தைகளுக்கு பொருந்தும். குறிப்பாக சவால்களை சந்திக்க விரும்பும் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டினால், அவர்கள் விசுவாசத்தை மதிப்பார்கள், அவர்கள் தங்கள் கற்பனை உலகில் ஹீரோவாக வலம் வருவார்கள்.
ஆர்ச்சி
ஆர்ச்சி என்றால், கிறிஸ்டியின் சுவே டிடெக்டிவ் கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். இது அழகிய பழங்காலப் பெயர்தான். ஆனால் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் பெயர். இந்தப் பெயர் ஷார்ப்பான மூளை கொண்ட ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். இது அறிவார்ந்தவர் மற்றும் மர்மம் நிறைந்த நபர் என்பதைக் குறிக்கும்.
ஜெம்
ஜெம் என்பது டு கில் அ மாக்கிங் பேர்ட் என்ற புத்தகத்தில் வரும் வீரமிக்க மற்றும் அன்பான சகோதரர் கேரக்டர் ஆகும். இது விசுவாசம் மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது. இது எளிமையான மற்றும் மார்டன் நிக் நேம் ஆகும். இது ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். இந்தப்பெயரைக் கொண்டவர்கள் சரியானவற்றுக்காக நிற்பார்கள், இவர்கள் நேர்மையின் பக்கம் இருப்பார்கள்.
அஸ்லான்
தி கிரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா, என்ற சி.எஸ்.லிவிஸின் நாவலில் இருந்து பெறப்பட்ட பெயர். அஸ்லான் என்றால் பலம், தைரியம் மற்றும் ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள் என்ற பொருளைத் தரும். இந்தப்பெயர் தலைமைப்பண்பு, சக்தி, ஆற்றல், பாதுகாப்பு மற்றும் அரசன் போன்றவற்றை குறிப்பதாகும்.
ஜார்ஜ்
ஜார்ஜ் என்ற பெயர், ஜார்ஜ் ஃப்ரம் த ஃபேவரைட் ஃபைவ் என்ற புத்தகத்தில் இருந்து பெறப்பட்ட பெயராகும். இது ஒரு அனைவரையும் கவரக்கூடிய மற்றும் மகிழ்ச்சிகரமான, ஒரு வைப்பை ஏற்படுத்தக்கூடிய பெயராகும். இது ஒரு சாதனை குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இது உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராகும். மர்மங்களைத் தீர்க்கும் நபர் என்பதைக் குறிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நபர் என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது.
சிரியஸ்
சிரியஸ் என்ற பெயர் கிரேக்கத்தை தோற்றமாகக் கொண்ட பெயர். இதற்கு பளபளக்கும் என்று பொருள். ஹாரிபாட்டர் சிரீஸின் சைரஸ் ப்ளாக் என்ற கதாபாத்திரத்தில் இருந்து பெறப்பட்ட பெயராகம். இந்தப்பெயருக்கு பளபளக்கும், பலம், தெய்வீக ஆற்றல் என பல அர்த்தங்கள் உள்ளது.
ரீத்
ரீத், ஆங்கிலத்தில் இருந்து உருவான பெயர். இதற்கு அறிவுரை என்று பொருள். மார்க்கரேட் மிட்செல்லின் கான் வித் எ விண்ட் என்ற புத்தகத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட ரீத் என்ற கதாபாத்திரத்தில் இருந்து பெறப்பட்ட பெயராகும். இது தன்னம்பிக்கை, வசீகரம், கிளர்ச்சியாளர் போன்ற அர்த்தங்களைக் குறிக்கும். இந்தப்பெயர், வலுவான, கவர்ச்சியான நபர் என்பதையும் குறிக்கும்.
பக்
பக் என்பது ஆங்கிலப் பெயராகும். இது வலுவான நபர் என்பதைக் குறிக்கும். திறமையானவர் மற்றும் இயற்கையுடன் தொடர்பு கொண்ட நபர் என்ற அர்த்தத்தைத் தரும் பெயராகும். இது பெர்ல் எஸ். பக் என்ற எழுத்தாளரின் பெயரில் இருந்து பெறப்பட்ட பெயர்.
மைலோ
லத்தீன், ஜெர்மனி இரண்டையும் தோற்றமாகக் கொண்டது இந்த மைலோ என்ற பெயர். இதற்கு போராளி என்று பொருள். கருணை நிறைந்தவர் என்ற அர்த்தமும் உள்ளது. இது இரக்கம் மற்றும் பலம் என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளது. வரலாற்று ரீதியாக, இந்தப்பெயர் போராளிகளுடன் தொடர்பு கொண்டது. வீரர், மதிக்கக்கூடிய நபர் என்பதைக் குறிக்கும். இது அன்பானவர், நேர்மையானவர் என்பதையும் குறிக்கும்.
அமோரி
அமோரி என்பது பழைய ஜெர்மனியப் பெயராகும். இது லத்தீனை தோற்றமாகக் கொண்ட பெயர். இதற்கு சக்தி வாய்ந்த அல்லது ஆட்சியாளர் என அர்த்தமுள்ளது. இது அன்பு மற்றும் பாசத்தைக் குறிக்கிறது. இந்தப் பெயர் லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் என்பரின் அமூரி இஸ் திஸ் சைட் ஆஃப் பேரடைஸ் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
டாபிக்ஸ்