குரு 2025 வரை விடமாட்டார்.. வக்கிர பெயர்ச்சியில் சிக்கிய ராசிகள்.. விரட்டி விரட்டி கொட்டும்.. வாங்க பார்க்கலாம்!
Lord Guru: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் குருபகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Guru: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் குருபகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்மராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தை உயர்த்தி காட்டக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாத அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எதிரிகள் உங்களுக்கு குறைந்து விடுவார்கள்.
ரிஷப ராசி
குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நல்ல முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
செலவுகளை குறைத்து சேமிப்பு அதிகரிக்க கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும். பண யோகத்தை பெறுகின்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். நண்பர்களுக்கு தேவையான உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.