ராஷ்மிகா இல்லாமல் நான் இல்லை என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா.. வந்ததே பீலிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராஷ்மிகா இல்லாமல் நான் இல்லை என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா.. வந்ததே பீலிங்ஸ்

ராஷ்மிகா இல்லாமல் நான் இல்லை என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா.. வந்ததே பீலிங்ஸ்

Marimuthu M HT Tamil
Dec 12, 2024 03:34 PM IST

ராஷ்மிகா இல்லாமல் நான் இப்படி நடிச்சிருக்க முடியாது என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா

ராஷ்மிகா இல்லாமல் நான் இல்லை என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா.. வந்ததே பீலிங்ஸ்
ராஷ்மிகா இல்லாமல் நான் இல்லை என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா.. வந்ததே பீலிங்ஸ்

ராஷ்மிகா தனது சக நடிகர் அல்லு அர்ஜூன் குறித்து கூறிய கருத்தும், அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா குறித்துகூறிய கருத்துகளும் வைரல் ஆகி வருகின்றன.

பிங்க்வில்லா உடனான சமீபத்திய நேர்காணலில், புஷ்பா 2 படத்தின் அல்லு அர்ஜுன் புடவை அணிந்திருப்பதைப் பற்றி ராஷ்மிகாவும், ராஷ்மிகா இல்லாமல் தான் இப்படி நடித்திருக்கமாட்டேன் எனவும் நடிகர் அல்லு அர்ஜூன் அளித்த பேட்டி வைரல் ஆகியுள்ளது.

‘நான் அவரை ரசிக்கிறேன்’ - ராஷ்மிகா

’புஷ்பா 2' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ஜதரா காட்சி, குறிப்பாக அல்லு அர்ஜுனின் ஸ்டெப், ஆக்ஷன், வசனங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. புஷ்பா 2வில் அல்லு அர்ஜூனின் சமீபத்திய நடிப்பினை பிங்க் வில்லா பேட்டியில் பேசிய ராஷ்மிகா கூறியதாவது, "அல்லு அர்ஜுன் சார் மட்டும்தான் இந்தக் காட்சியை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியும்.

என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு காட்சியை மீண்டும் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை. இவ்வளவு தைரியமும், அதிகாரமும் உள்ள ஒரு ஹீரோ சேலை கட்டிக்கொண்டு, சேலையில் நடனமாடி, அந்த சேலையில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து, சேலையில் வசனம் பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். படத்தில் அவர் 21 நிமிடங்கள் சேலை அணிந்து நடித்திருக்கிறார். எந்த மனிதனால் அதைச் செய்ய முடியும் என்று சொல்லுங்கள். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். நான் அவரை ரசிக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவரை ஆதரிக்கிறேன்’’ என்று நடிகை ராஷ்மிகா மந்தன்னா அல்லு அர்ஜூனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ராஷ்மிகா இல்லாமல் நான் இப்படி நடிச்சிருக்க முடியாது: அல்லு அர்ஜூன்

ராஷ்மிகா மந்தனா பற்றி பேசியுள்ள அல்லு அர்ஜுன், ‘’ராஷ்மிகா இல்லாமல் படம் சாத்தியமில்லை. ராஷ்மிகா மந்தன்னாவின் ஆதரவு இல்லாமல் தான் அப்படி நடித்திருக்க முடியாது.

புஷ்பா படத்திற்குப் பின், ராஷ்மிகா தனது குடும்பம் போல மாறிவிட்டார். ஒரிஜினல் அம்மா ராஷ்மிகா போல இருக்க வேண்டும். புஷ்பா 2 படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் நாள் முழுவதும் ராஷ்மிகா மகிழ்ச்சியாக கழித்திருப்பார்’’ என்றும் அவர் கூறியிருந்தார்.

புஷ்பா 2 படத்தின் கதை என்ன?

புஷ்ப ராஜ் (அல்லு அர்ஜுன்) சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் மறுக்க முடியாத தலைவராக மாறுகிறார். தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கிறார். எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்) ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.

ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா மந்தனா) புஷ்பா முதலமைச்சருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க விரும்புகிறார். ஆனால் முதலமைச்சர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார். முதலமைச்சரை நீக்கிவிட்டு சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார்.

அதே வேளயைில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார். அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து. இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?

இந்த சவாலில் புஷ்பா வெற்றி பெற்றாரா? புஷ்பாவின் பேரத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்ன செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் (ஜெகபதி பாபு) புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.

புஷ்பா 2வின் வசூல் நிலவரம்:

புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தை பொறுத்தவரை, கடந்த டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்தது போலவே பாக்ஸ் ஆபிஸ் சாதனையைப் படைத்து வருகிறது. குறிப்பாக, அதிவேகமாக ஆறே நாட்களில் ரூ.1,000 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. அதிவேகமாக கற்பனை செய்ய முடியாத சாதனையை எட்டிய புஷ்பா 2, வரும் நாட்களில் இன்னும் எத்தனை சாதனைகள் மீண்டும் செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையில், புஷ்பா 2 அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று ராஷ்மிகா மந்தனா புரொமோஷன்களின்போது பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.