சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்ட்டாக இருக்கவேண்டுமா? இந்த ஒரு பொருள் மட்டும் சேருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்ட்டாக இருக்கவேண்டுமா? இந்த ஒரு பொருள் மட்டும் சேருங்கள்!

சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்ட்டாக இருக்கவேண்டுமா? இந்த ஒரு பொருள் மட்டும் சேருங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 23, 2024 01:39 PM IST

சாஃப்ட்டான சப்பாத்தி செய்வது எப்படி என்று பாருங்கள்.

சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்ட்டாக இருக்கவேண்டுமா? இந்த ஒரு பொருள் மட்டும் சேருங்கள்!
சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்ட்டாக இருக்கவேண்டுமா? இந்த ஒரு பொருள் மட்டும் சேருங்கள்!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – அரை கிலோ

கொண்டைக்கடலை மாவு – 50 கிராம்

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

இரண்டு மாவையும் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும். மாவு பிசையும்போது இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். கடைசியாக எண்ணெய் சேர்த்து திரட்டி, தேய்த்து சாப்பாத்திகளாகவோ அல்லது ரொட்டிகளாகவோ அல்லது ஃபுல்காவாகவோ தயார் செய்துகொள்ளலாம்.

இந்த சப்பாத்தி மிக மிருதுவாகவும், குழந்தைகள் கடிப்பதற்கு ஏற்றதாகவும், வயதானவர்கள் பல் இல்லாவிட்டாலும் மென்று சாப்பிட ஏதுவாகவும் இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள உங்களுக்கு பிடித்த குருமா, கிரேவி, தயிர் பச்சடி என எதை வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம்.

மிருதுவான சப்பாத்திக்கு மேலும் சில குறிப்புகள்

எண்ணெய் மற்றும் நெய் கலந்து சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள் ஸ்பூன் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த அளவு சுலையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது, அதனுடன் இரண்டு கைப்பிடியளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும். சுவையும் வித்யாசமாக இருக்கும்.

சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய் தடவி வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும். சப்பாத்தி செய்யும்போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

சப்பாத்தி மாவை நன்றாகத் தேய்த்து, அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒருமுறை தேய்த்தால், சப்பாத்தி நன்றாக உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.

சப்பாத்திக்கு தேய்க்கும்போது மாவை தொட்டு, சப்பாத்தியை தேய்த்து, பின்னர் எண்ணெய் ஊற்றி தேய்த்தால், சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றும் தேவை இருக்காது.

சப்பாத்தி தேய்க்கும்போது மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக தேய்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.

சூடான தண்ணீரில் மாவைப் பிசைவதால், பிசையும்போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

இதுபோல் சப்பாத்தி செய்து பாருங்கள், உங்கள் வீட்டில் பல் இல்லாத பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றை பின்பற்றினால், தினமும் சாப்பாத்திதான் சாப்பிடுவீர்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.