நாம் அன்றாடம் உட்கொள்ளும் ஒன்றுதான்; ஆனால் அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!
Oct 06, 2024, 10:44 AM IST
நாம் அன்றாடம் உட்கொள்ளும் ஒன்றுதான்; ஆனால் அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள். அன்றாடம் சாப்பிடும் இட்லி நமக்கு அள்ளித்தரும் நன்மைகள் என்னவென்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் தினமும் காலையில் சாப்பிடும் உணவு தான். மிருதுவான இட்லிகள் தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காலை உணவு. குறிப்பாக தென்னிந்தியாவின் முக்கிய உணவு இட்லிதான். இது ஆரோக்கியமானதும், சுவையானதும் ஆகும். இதை அண்மையில் நடந்த அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது. ஆரோக்கிய உணவுகளுள் ஒன்றாக இட்லியை தேர்வுசெய்துள்ளது. தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது குளுட்டன் உணவுகள் அலர்ஜி ஏற்படுத்துபவர்களுக்கு சிறந்த தேர்வு ஆகும். சூடான இட்லிகளுக்கு சுவையான மல்லி, புதினா, தக்காளி, வெங்காயம், தேங்காய் என சட்னிகள் அரைத்து வைத்து சாப்பிட்டாலும் அல்லது சாம்பார், குருமா என சாப்பிட்டாலும் உங்கள் மனதுக்கு அத்தனை நிறைவைத் தருகிறது. இந்த இட்லியில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரியுமா?
கொழுப்பு இல்லாதது
இட்லியில் இயற்கையான கொழுப்புகள் உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடுவதால் கொழுப்பு இல்லாமல் உள்ளது. வறுத்து சாப்பிட்டால் தான் அதில் கொழுப்பு அதிகம் இருக்கும். வேகவைப்பது இதில் இயற்கையாகவே கொழுப்பை குறைக்கிறது. இதில் கொழுப்பு இல்லை. இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து மற்றும் வேறு பல உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
குடலுக்கு இதமானது
இட்லி மாவில் புளிக்கவைக்கப்பட்ட அரிசி மாவு மற்றும் பருப்பு வகைகள் இடம்பெற்றுள்ளன. இது உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இந்த புளிக்க வைப்பது, உங்களுக்கு உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு வழிவகுத்து, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.
தானியங்கள்
இட்லியை பல்வேறு தானியங்கள் வைத்தும் செய்ய முடியும். அரிசி மற்றும் உளுந்து தான் இதற்கு முக்கிய உட்பொருள் என்றாலும், இதை சிறு தானியங்கள் வைத்தும் செய்து ருசிக்க முடியும் என்பதால், இது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக மாறுகிறது. ஓட்ஸ் மற்றும் பல தானியங்களிலும் இட்லி செய்ய முடியும் என்பதால் இட்லி உங்களின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
வயிறு நிறைந்த உணர்வு
இட்லி மிருதுவான மற்றும் வயிற்றுக்கு இதமளிக்கும் உணவுகளில் ஒன்று. இதை சாம்பார் மற்றும் சட்னிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது உங்களின் பசியை அது கட்டுப்படுத்துகிறது. இதனால் 3 இட்லிகள் சாப்பிட்டாலே உங்களுக்கு பசி குறைகிறது. பருப்பு வகைகளை சேர்த்து அரைக்கும் இட்லிகளை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிடும்போது அது உங்களுக்கு முழு உணவு சாப்பிட்ட திருப்தியைத் தருகிறது. இதில் கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது.
மிருதுவான, மிதமான, சாப்பிட எளிதான இட்லிகள்
மிருதுவான, மிதமான மற்றும் சாப்பிட எளிதான இட்லிகள் உங்களின் பசியைப் போக்குவதுடன், மென்று சாப்பிட ஏதுவாக உள்ளன. இது பச்சிளம் குழந்தையின் முதல் தேர்வு ஆகும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது இட்லி. இதை பற்களில் பிரச்னைகள் உள்ளவர்கள் அல்லது பற்களே இல்லாதவர்கள் கூட மென்று சாப்பிட்டு விடலாம். கடித்து மென்று சாப்பிடுவதற்கும் இதமானது.
சைவ உணவு
இதில் விலங்கு உட்பொருட்கள் எதுவும் இல்லை. இதில் வெறும் தாவரப் பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படுவதால் சைவப்பிரியர்களுக்கு சிறந்த தேர்வு. ஆனால் இது சைவம், அசைவம் இரு உணவுகளும் சாப்பிடுபவர்கள் சாப்பிட ஏதுவானது. ஏனெனில் சைவப்பிரியர்கள் சாம்பார் சட்னியுடனும், அசைவப்பிரியர்கள் கறிக்குழம்பு அல்லது மீன் குழம்புடனும் சாப்பிடலாம். இதில் குளுட்டன் இல்லை. இதை சாப்பிடும்போது இதமான உணர்வைத் தரும். உங்கள் உணவில் இட்லியை சேர்த்துக்கொள்வதால் அது உங்களுக்கு சுவை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. இதை நீங்கள் காலை உணவாக சாப்பிடலாம் அல்லது ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம்.
2 இட்லிகள் மற்றும் ஒரு கப் சாம்பாரை நீங்கள் சாப்பிட்டால் அதில் இருந்து 262 கலோரிகள் கிடைக்கும். 46 கிராம் கார்போஹைட்ரேட்களும், 11 கிராம் புரதமும், கொழுப்பு 6 கிராமும், நார்ச்சத்துக்கள் 12 கிராமும் கிடைக்கும்.
டாபிக்ஸ்