விந்தணுக்கள் குறைபட்டால் குழந்தையில்லையா? நல்லெண்ணெய் இருந்தால் போதும்! இந்த எளிய தீர்வு உதவும்!
Oct 06, 2024, 09:44 AM IST
விந்தணுக்கள் குறைபட்டால் குழந்தையில்லையா? நல்லெண்ணெய் இருந்தால் போதும். இந்த எளிய தீர்வு உதவும். என்ன செய்யவேண்டும் பாருங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
ஆண்களுக்கு உடலில் விந்தணுக்கள் குறைவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளது.
வாழ்வியல் தேர்வுகள்
உடல் பருமன், போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு, புகையிலை சாப்பிடுவது, மது அருந்துதல் போதை மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடற்பயிற்சிகள் செய்யாதது போன்றவற்றால் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்
பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழில் நிறுவனங்களின் மாசுக்கள் என அனைத்தும் உங்கள் உடலில் விந்தணுக்கள் குறைய காரணமாகின்றன.
சூடு
நீண்ட நேரம் லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வது உங்களுக்கு உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கும் காரணிகளுள் ஒன்றாக உள்ளது.
மருத்துவ நிலைகள்
மரபணுக்கள் கோளாறு, வெரிக்கோஸ் நரம்புக் கோளாறுகுள், சிஸ்டிக், ஹார்மோன் சமமின்மை ஆகியவற்றாலும் விந்தணுக்கள் குறைகிறது.
மனஅழுத்தம்
நாள்பட்ட மனஅழுத்தமும் ஹார்மோன் உற்பத்தியை குறைத்து, விந்தணுக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தொற்றுகள்
பாலியல் நோய் தொற்றுகள், யூரினரி ட்ராக் தொற்றுகள் மற்றும் வைரஸ் தொற்றுகளும், அம்மை தொற்றுகளும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
மருந்துகள்
மருந்துகளும் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது.
மற்ற காரணிகள்
இடுப்பில் செய்யப்படும் பெரிய அறுவைசிகிச்சைகளும் விந்தணுக்களின் உற்பத்திக்கு காரணமாகிறது.
விந்தணுக்கள் குறைவதைத் தடுக்க வீட்டில் இருந்தே செய்யக் கூடிய எளிய தீர்வு என்ன?
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
பூண்டு – 2 பல் (முழுதாக, தோல் உரிக்காதது)
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவேண்டும். அது சூடானவுடன் அதில் உரிக்காத பூண்டு பற்கள் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை சேர்த்து சிறிது நேரம் சூடுபடுத்தி இறக்கி ஆறவிடவேண்டும். ஆறியவுடன், இரு கால்களிலும் உள்ள பெரு விரல்களிலும் உள்ள நகத்தில் தடவ வேண்டும். அதை சிறிது நேரம் கழித்து கழுவிவிடவேண்டும் அல்லது குளிக்கச் செல்லும்முன் தடவிவிட்டு குளித்துவிட்டு வந்துவிடலாம்.
இவ்வாறு செய்யும்போது உங்கள் உடலில் உள்ள சூடு குறையும். இதை நீங்கள் நன்றாகவே உணர முடியும். மனஅழுத்தம் மற்றும் உடல் சூடு குறையும். விந்தணு குறைபாடு உள்ளவர்களும் இதை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், உடலில் உள்ள சூடு குறைந்து, அதிக உஷ்ணத்தால் உங்களுக்கு விந்தணுக்கள் குறைந்திருந்தால் அது சரிசெய்யப்படும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்