How To Lose Belly Fat: முளைகட்டிய தானியங்கள் முதல் முட்டை வரை: தொப்பையைக் குறைக்க உதவும் 10 சிறந்த காலை உணவுகள்!-to lose belly fat effectively morning is the best time as eating the right breakfast or foods can set tone for the day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  How To Lose Belly Fat: முளைகட்டிய தானியங்கள் முதல் முட்டை வரை: தொப்பையைக் குறைக்க உதவும் 10 சிறந்த காலை உணவுகள்!

How To Lose Belly Fat: முளைகட்டிய தானியங்கள் முதல் முட்டை வரை: தொப்பையைக் குறைக்க உதவும் 10 சிறந்த காலை உணவுகள்!

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 09:31 PM IST

How To Lose Belly Fat:பாசிப்பருப்பு சீலா முதல் முளைகட்டிய தானியங்கள் வரை, 10 ஆரோக்கியமான காலை உணவுகள் பற்றி அறிவோம்.

வயிற்றில் உள்ள கொழுப்பை திறம்பட குறைக்க, காலை நேரமே சிறந்த நேரமாகும், ஏனெனில் சரியான காலை உணவை உட்கொள்வது அன்றைய கொழுப்பைக் குறைக்கும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை திறம்பட குறைக்க, காலை நேரமே சிறந்த நேரமாகும், ஏனெனில் சரியான காலை உணவை உட்கொள்வது அன்றைய கொழுப்பைக் குறைக்கும். (Shutterstock, Freepik, Pinterest)

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது என்பது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தொப்பையைக் குறைக்க சிறந்த நேரம், காலை.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவேண்டும். மேலும், புரதங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைக் கொண்ட சீரான உணவில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். 

உணவைத் தவிர, வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் வலிமைப் பயிற்சி வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

ஒருவர் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செயல்பாட்டை நோக்கமாகக் கொள்ள வேண்டும். 

தொப்பையைக் குறைக்க உண்ணவேண்டிய காலை உணவுகள்:-

மும்பையைச் சார்ந்த உணவியல் நிபுணர் அம்ரீன் ஷேக், தொப்பையைக் குறைக்க உதவும் காலை உணவுகள் குறித்துக் காண்போம். 

1. சாம்பாருடன் இட்லி: புளித்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படும் இட்லியில் கொழுப்பு குறைவாக உள்ளது. பயறு மற்றும் பல்வேறு காய்கறிகளைக் கொண்ட சாம்பாருடன் இதனைச் சேர்த்துக் கொண்டு உண்ணலாம். சரியான காலை உணவு மதியம் வரை, பகலில் பசியைக் கட்டுப்படுத்துவதையும், கலோரி அளவைக் குறைப்பதையும் உறுதி செய்யும்.

2. கோதுமை கிச்சடி: கோதுமை கிச்சடி, பயிறு மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்படுகிறது. தொப்பையைக் குறைக்க சீரான உணவை உண்ணவேண்டும்.

3. தயிருடன் குறைந்த கொழுப்புள்ள பன்னீர் பராத்தா: புரதம் நிறைந்த காலை உணவை உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்கும் தந்திரமாகும். முழு கோதுமை தானியங்களால், 

பன்னீர் பராத்தாவை தயாரிக்கலாம். மேலும் புரோபயோடிக்குகளை உறுதிசெய்யும், கொழுப்பினைக் குறைக்க உதவும் தயிரினை இதில் சேர்த்துக்க்கொள்ளலாம். 

4. பாசிப்பருப்பு சீலா: காய்கறிகளுடன் கலந்த பாசிப்பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படும் அப்பத்தின் பெயரே,பாசிப்பருப்பு சீலா. அவை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. குறைவான கலோரிகளைக் கொண்டவை. இந்த கலவையானது உங்கள் தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவும். 

5. முளைகட்டிய தானியங்கள்: வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த முளைத்த சுண்டல் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவினை உருவாக்குகிறது. இந்த காலை உணவு தேர்வு உங்கள் உடலுக்கு நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குவதை உறுதி செய்யும்.

6. ஓட்மீல்: நார்ச்சத்து  நிறைந்த ஓட்ஸ் ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணரவைக்கும். இதைக் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். 

7.பெர்ரிகளுடன்கூடிய தயிர்: தயிரில் புரதம் நிறைந்துள்ளது, அதே நேரத்தில் பெர்ரியில் நார்ச்சத்து உள்ளது. இந்த சுவையான காலை உணவு உங்களது கொழுப்பினைக் குறைக்க உதவும். 

8. முட்டை: நல்ல தரமான புரதத்தால் நிரம்பியுள்ளது, முட்டை. இது பசியைக் கட்டுப்படுத்தவும், தசை வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது. இது கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது. இதனை ஆம்லெட், அவித்த முட்டை எனப் பயன்படுத்தலாம். 

9. கீரை ஜூஸ்: கீரை, பழங்கள் கொண்ட ஜூஸ், உடலுக்கு புரதத்தைத்தரும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்கள் உடலை நன்கு வளர்ப்பதையும், எடை இழப்புக்கு உதவுவதையும் உறுதி செய்யும்.

10. சியா விதை புட்டு: சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது முழுமையை ஊக்குவிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதில் புட்டு செய்து காலையில் உணவாக எடுத்துக்கொள்ளலாம். 

தொப்பையைக் குறைக்க இந்த கலவையை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடுதலாக, வழக்கமான உடற்பயிற்சி உடலைச் சமப்படுத்தும்.  

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.