Black Rice Cookies: சட்டுனு செய்யலாம் சத்தான கவுனி அரிசி குக்கீஸ்! ஈஸி ரெஸிபி!
Black Rice Cookies: குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடித்தமான உணவாகும். இந்த குக்கீஸில் மிகவும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை கலந்து தருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
உங்க வீட்டு குட்டீஸ் சத்தான உணவுகளை பிடிக்காமல் ஒதுக்கி தள்ளலாம். ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்கும் எக்ஸைடிங் சுவைகள் அந்த உணவுகளில் கிடைக்காமல் போகலாம். குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடித்தமான உணவாகும். இந்த குக்கீஸில் மிகவும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை கலந்து தருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இது போன்ற டிரிக்சை பயன்படுத்தி அவர்களுக்கு விரும்பிய உணவுகளில் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வைத்து கொடுக்கலாம். இதில் முக்கியமானதாக இந்த கவுனி அரிசியில் செய்யும் பிளாக் குக்கீஸ் இருக்கும் இதனை செய்யும் ஈஸியானசெயல்முறைகளை தெரிந்து கொள்ள இதனை முழுவதுமாக படிக்கவும்.
தேவையான பொருட்கள்
கால் கிலோ கவுனி அரிசி
200 கிராம் கோதுமை மாவு
ஒரு பட்டர் பேப்பர்
சிறிதளவு கடலை மாவு
சிறிதளவு பேக்கிங் பவுடர்
50 கிராம் வெண்ணெய்
100 கிராம் நாட்டு சர்க்கரை
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு தோசை சட்டியை வைத்து மிதமான தீயில் சூடாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் பட்டர் பேப்பரை வைத்து அதன் மீது லேசாக வெண்ணெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் கவுனி அரிசியை போட்டு நன்கு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மாவு சலிக்கும் தட்டை எடுத்து அதில் கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, கடலை மாவு ஆகியவகளை போட்டு வெண்ணெய் நாட்டு சர்க்கரை கலவை வைத்திருந்த பாத்திரத்தில் சளித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பேக்கிங் சோடா, சிறிதளவு உப்பு கலந்து மாவை நன்கு பிசைய வேண்டும்.
பிசைந்த மாவை 15 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக குக்கீஸ் வடிவில் தட்டி பட்டர் பேப்பர் வைத்திருந்த கடாயில் வைக்கவும். இந்த கடாயை எடுத்து சூடு பண்ணி வைத்திருந்த தோசை சட்டியில் வைத்து மூடி வேக வைக்க வேண்டும். இது 20 நிமிடங்களில் நன்றாக வெந்து விடும். இதனை எடுத்து சாப்பிட்டால் சுவையான குக்கீஸ் ரெடி. இதனை ஒரு பிளாஸ்டிக் குடுவையில் அடைத்து வைத்து பாதுகாப்பாக வைக்கலாம். இது 2 வாரங்களுக்கு மேல் கேட்டு போகாமல் நன்றாக இருக்கும்.
பல வகை குக்கீஸ்கள்
கவுனி அரிசியில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும் இதனைப் போல கம்பு, சோளம், கேழ்வரகு என பல ஊட்டச்சத்து மிக்க பொருட்களிலும் இதே முறையை பயன்படுத்தி குக்கீஸ் செய்யலாம். இவ்வாறு செய்து கொடுப்பதால் குழந்தைகளுக்கு எளிமையாக ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். வெளி கடைகளில் விற்கப்படும் உணவு வகைகளில் பல கெமிக்கல் பொருட்கள் கலந்து தர வாய்ப்புள்ளது. இதில் நாட்டு சர்க்கரை கலந்து இருப்பதால் பெரியவர்களும் இதனை சாப்பிடலாம். வீட்டில் அனைவரும் சாப்பிடும் வகையில் செய்யப்பட்ட இந்த குக்கீஷை சாப்பிட்டு மகிழக்கியாக இருங்கள்.
டாபிக்ஸ்