தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Poondu Kulambu Podi : வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு இதமாகவும்; வறுத்து அரைச்ச பூண்டு குழம்பு மசாலாப் பொடி!

Poondu Kulambu Podi : வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு இதமாகவும்; வறுத்து அரைச்ச பூண்டு குழம்பு மசாலாப் பொடி!

Priyadarshini R HT Tamil
Jun 24, 2024 12:38 PM IST

Poondu Kulambu Podi : வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு இதமாகவும், வறுத்து அரைச்ச பூண்டு குழம்பு மசாலாப் பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Poondu Kulambu Podi : வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு இதமாகவும்; வறுத்து அரைச்ச பூண்டு குழம்பு மசாலாப் பொடி!
Poondu Kulambu Podi : வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு இதமாகவும்; வறுத்து அரைச்ச பூண்டு குழம்பு மசாலாப் பொடி!

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

ட்ரெண்டிங் செய்திகள்

வர மிளகாய் – 4

வர மல்லி – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் துருவல் – கால் கப்

செய்முறை

கடாயை சூடாக்கி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் என அனைத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ட்ரையாக வறுத்து, பொடியாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப்பொடியை காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து ஃபிரிட்ஜில் இரண்டு வாரங்கள் வரை வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை நீண்ட நாட்கள் சேமிக்க விரும்பினால், அதற்கு தேவையான பொருட்களின் அளவை அதிகரித்துக்கொண்டு, ஃபிரஷ் தேங்காய் துருவலுக்கு பதில் கொப்பரைத் தேங்காயை சேர்த்துக்கொள்ளவேண்டும். 

கொப்பரை தேங்காய் சேர்க்கும்போது, அந்தப்பொடியை நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் சேகரித்துக்கொள்ள முடியும்.

பூண்டு குழம்பு மசாலாப்பொடி தயார்.

இதைப்பயன்படுத்தி பூண்டுக்குழம்பு செய்வது எப்படி?

குழம்பு வைக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

பூண்டு – 20 பல்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

புளிக்கரைசல் – ஒரு கப்

எலுமிச்சை அளவை விட அதிகம் சேர்த்து

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

மல்லிப்பொடி – ஒரு ஸ்பூன்

மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

கடாயில் எண்ணெய் சூடாக்கி வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பூண்டு பல் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும்.

அரைத்த மசாலாப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி என அனைத்தும் சேர்த்த நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் புளிக்கரைசல் மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரை கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பர் சுவையில் பூண்டு குழம்பு தயார்.

பூண்டின் நன்மைகள்

பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் நறுமணத்துக்கு அலிசின் என்ற உட்பொருள் காரணமாகும். இதுதான் பூண்டை உங்களுக்கு ஏற்ற உணவாக மாற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பூண்டு உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், அது உங்களுக்கு குடல் புற்றுநோய் எற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

வீக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது

பூண்டு எண்ணெய் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. உங்களுக்கு மூட்டு மற்றும் தசைகளில் வலிகள் ஏற்பட்டால் பூண்டு எண்ணெயை தடவலாம். இது ஆர்த்ரிட்டிஸ் நோயால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் தமனிகளில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த சிவப்பணுக்கள், பூண்டில் உள்ள சல்பஃரை ஹைட்ரோஜென் சல்ஃபைட் வாயுவாக மாற்றுகிறது. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது.

சருமத்துக்கு பொலிவைத் தருகிறது

பூண்டின் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை தூய்மையாக்குகிறது. முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. முகப்பருக்களில் பூண்டை வைத்து தேய்க்கும்போது அவை அகற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

ஆனால் பூண்டு உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால், அதை சருமத்தில் தேய்க்கும்போது கவனம் தேவை. எனவே இதை செய்யும் முன் உங்கள் சரும நோய்கள் நிபுணரை அணுகுவது சிறந்தது.