தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பண்டிகைன்னாலே விளக்குகளை சுத்தம் செய்வது கஷ்டமா? இதோ பஞ்ச பாத்திரங்களை கழுவ எளிய வழி!

பண்டிகைன்னாலே விளக்குகளை சுத்தம் செய்வது கஷ்டமா? இதோ பஞ்ச பாத்திரங்களை கழுவ எளிய வழி!

Priyadarshini R HT Tamil

Dec 15, 2024, 04:33 PM IST

google News
பஞ்ச பாத்திரத்தை கழுவும் எளிய வழியைப் பாருங்கள்.
பஞ்ச பாத்திரத்தை கழுவும் எளிய வழியைப் பாருங்கள்.

பஞ்ச பாத்திரத்தை கழுவும் எளிய வழியைப் பாருங்கள்.

பண்டிகை காலங்களில் நமக்கு வீடு முழுவதையும் நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அது கூட எளிய வேலையாக இருக்கும். ஆனால் இந்த பஞ்ச பாத்திரங்களை சுத்தம் செய்வது கடும் சவாலான ஒன்று. வழக்கமாக புளி தேய்த்து அதை சுத்தம் செய்வார்கள். அதற்காக பிரத்யேக பொடிகளும் மார்க்கெட்டில் உள்ளது. ஆனால் நீங்களே எளிமையாக சில பொருட்களை சேர்த்து பஞ்ச பாத்திரங்களை கழுவும் மிக்சரை உருவாக்க முடியும். அது என்னவென்று இங்கு பாருங்கள்.

தேவையான பொருட்கள்

லெமன் சால்ட் – 2 ஸ்பூன்

கல் உப்பு – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

வினிகர் – 2 ஸ்பூன்

வாஷிங் லிக்விட் – 3 ஸ்பூன்

தண்ணீர் – கால் கப்

செய்முறை

லெமன் சால்ட், கல் உப்பு, எலுமிச்சை பழச்சாறு, வினிகர், வாஷிங் லிக்விட் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

அதை பஞ்ச பாத்திரங்களின் மேல் ஊற்றி தேய்த்தாலே போதும் அதில் உள்ள அழுக்குகள் சுத்தமாகப் போய்விடும். ஒருமுறை இதை செய்து பாருங்கள் கட்டாயம் இதைத்தான் ஒவ்வொரு பண்டிகைக்கும் பின்பற்றுவீர்கள்.

இங்கு மற்றொரு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள். கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. கேக் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

ரவை – ஒரு கப்

சர்க்கரை – அரை கப்

பால் – அரை கப் (காய்ச்சி ஆறிய பால்)

தயிர் – கால் கப்

(தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் பாலை இன்னும் கால்கப் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்)

ரிஃபைண்ட் ஆயில் – கால் கப்

(வாசனை இல்லாத எண்ணெய் அல்லது பட்டர் என எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்)

ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

(வெண்ணிலா எசன்ஸ் இருந்தால் அதை கால் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். அது இல்லாவிட்டால் ஏலக்காய்ப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்)

பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – கால் ஸ்பூன்

செய்முறை

மிக்ஸி ஜாரில் ரவை, பால், தயிர், சர்க்கரை, ரீஃபைண்ட் ஆயில், ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வடித்து 10 நிமிடம் மூடி போட்டு ஊறவிடவேண்டும். ஊறியவுடன் ஒரு ஸ்பூனில் நன்றாக கலந்துவிடவேண்டும். அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்துகொள்ளவேண்டும். பேக்கிங் பவுடர் இல்லாவிட்டால், பேக்கிங் சோடா அதாவது சமையல் சோடாவே அரை ஸ்பூன் அளவுக்கு கலந்துகொள்ளலாம். மாவை கலந்துவிடும்போது நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

இதை கேக் டின்னில், சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு சுற்றிலும் தடவவேண்டும். பட்டர் பேப்பர் இருந்தால் போட்டுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அதில் மைதாவை தூவி விடவேண்டும். பட்டர் பேப்பர் போட்டால் அதிலும் சிறிது எண்ணெய் தடவவேண்டும்.

இதை நீங்கள் வழக்கமாக கேக் செய்யும் முறையில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் இருந்தால் அவனிலும் வைத்து செய்யலாம். இல்லாவிட்டால் ஒரு கடாயில் ஒரு ஸ்டாண்ட் போட்டு அதை மூடி வைத்து 15 நிமிடங்கள் ஃப்ரீ ஹீட் செய்துவிட்டு, இந்த கேக் டின்னை அதில் தூக்கி வைக்கவேண்டும். கடாய் 15 நிமிடங்கள் சூடானவுடன், அதில் மேல் உள்ள ஸ்டான்டில் வைத்து மூடி வைத்துவிடவேண்டும்.

பின்னர் 10 நிமிடங்களில் மாவு உப்பு வரும் அப்போது உங்களுக்கு விருப்பமான நட்ஸ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கொள்ளலாம். இந்த டாபிங்கை முன்னரே சேர்த்தால் கேக் உப்பி வராது. எனவே அது உப்பி வந்த பின்னர் மேலே தூவினால் அதனுடன் சேர்த்து நன்றாக வெந்துவிடும். மொத்தமாக இதை 45 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவிடவேண்டும்.

இதை டூத்பிக் வைத்து வெந்துவிட்டதா என்பதை சரிசெய்துவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, எடுத்து ஆறவைத்துவிடவேண்டும். ஆறியவுடன், ஒரு தட்டில் எடுத்து வைத்து கட் செய்து சாப்பிடலாம். சூப்பர் சுவையானது இந்த கேக். இந்த கிறிஸ்துமஸ்க்கு இந்த கேக்கை செய்து சாப்பிட சுவை அள்ளும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி