சிறுநீரக கற்கள் மீண்டும் மீண்டும் உருவாவதை தடுப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 15, 2024

Hindustan Times
Tamil

சிறுநீரக கற்கள் மீண்டும் உருவாவதை தடுப்பதன் மூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம்

சிறுநீரக கற்கள் காரணமாக கீழ் வயிறு, இடுப்பு பகுதிகளில் வலி ஏற்படுவதை தடுக்கலாம்

அதிக அளவில் தண்ணீர் பருகுவதால் சிறுநீரில் உள்ள பொருள்கள் கரையக்கூடும். இதன் விளைவாக கற்கள் உருவாவதும் தடுக்கப்படும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்

உங்கள் டயட்டில் சோடியம் அளவை குறைப்பதன் மூலம் சிறுநீரில் உள்ள கால்சியம் அளவு குறையும். இதன் விளைவாக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது

கால்சியம் நிறைந்த உணவுகள், பால் சார்ந்த பொருள்கள் அதிகமாக சாப்பிட்டால் குடலில் ஆக்சலேட்டை பிணைக்க உதவுவதுடன், அதன் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. இதனால் கற்கள் உருவாகும் அபாயமும் குறைகிறது

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை டயட்டில் அதிகமாக சேர்ப்பது, கால்சியத்துடன் பிணைப்பதன் மூலம் படிகமயமாக்கலைத் தடுத்து கற்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது

விலங்குகளின் புரதங்களான இறைச்சி, மீன் போன்றவற்றை அளவாக சாப்பிடுவதன் மூலம் யுரிக் அமில அளவு குறைக்கப்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து தடுக்கப்படுகிறது

தங்கள் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?