ஸ்ட்ராபெரி கேக் செய்வது எப்படி? கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகிவிட்டீர்களா?
ஸ்ட்ராபெரி கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கிறிஸ்துமஸ் வந்தாலே கொண்டாட்டம்தான். வகை வகையான கேக்குகளை சாப்பிடலாம். ஆனால் நீங்கள் இந்த கேக்குகளை வீட்லேயும் செய்ய முடியும் தெரியுமா? சிம்பிள் வெண்ணிலா கேக் முதல் சாக்லேட் கேக்குகள் என எண்ணற்ற ஃப்ளேவர்களில் உள்ள கேக்குகளையும் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதுமட்டுமின்றி ரவை, கோதுமை, ராகி என பல்வேறு வகை கேக்குகளையும் நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். இந்த வித்யாசமான கேக்குகள் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று பனானா கேக் செய்வது எப்படி என்று பாருங்கள்.
ஸ்ட்ராபெரியின் நன்மைகள்
ஸ்ட்ராபெரியின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் ஸ்ட்ராபெரி, இது சிவப்பு வண்ணத்தை பார்ப்பவர்களை சாப்பிடு தூண்டும் வகையில் இருக்கும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும். இதன் சதைகள் தண்டாகவும், இதில் மஞ்சள் நிற விதைகளும் இருக்கும். இந்த விதைகள்தான் உண்மையில் ஸ்ட்ராபெரி செடியின் பழங்கள் ஆகின்றன. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு. இதனால் நீங்கள் எடையிழக்க விரும்பினால் ஸ்ட்ராபெரிகளை அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஸ்ட்ராபெரியின் நன்மைகள் என்னவென்றால், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம். நீர்ச்சத்துக்கள் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெரி கேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
முட்டை – 2
(முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அடித்துக்கொள்ளவேண்டும். அது சில்லென்று இருக்கக்கூடாது. அறை வெப்பநிலையில்தான் இருக்கவேண்டும். ஃபிரிட்ஜில் இருந்தால் எடுத்து வெளியில் 2 மணி நேரம் வைத்துவிட்டு பின்னர்தான் பயன்படுத்தவேணடும்)
சர்க்கரை – முக்கால் கப்
மைதா – ஒரு கப்
ரீஃபைண்ட் ஆயில் – கால் கப்
பால் – அரை கப்
ஸ்ட்ராபெரி எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்
செய்முறை
முட்டையின் வெள்ளைக்கருவை முதலில் அடித்துக்கொண்டு, அடுத்து சர்க்கரையை சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். வெள்ளைக்கருவையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு எலக்ட்ரானிக் பீட்டர் வைத்து அடித்துக்கொள்ளவேண்டும். அது இல்லாவிட்டால் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். இந்தக்கலவை நல்ல மிருதுவாக வரவேண்டும்.
அடுத்து மைதாவை சேர்த்து நல்ல மிருதுவாக கலந்துவிடவேண்டும். மாவை சலித்துவிட்டு சேர்க்கவேண்டும். அப்போதுதான் கேக் அனைத்து புறங்களிலும் நன்றாக வெந்துவரும். அதை கலக்கும்போதும் மிருதுவாக கலக்கினால்தான் கேக் சாஃப்ட்டாக இருக்கும்.
காய்ச்சி ஆறிய பாலில் ஸ்ட்ராபெரி எசன்ஸ் கலந்து அதை தனியாக அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதையும் இந்த மாவில் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவேண்டும். இதையும் நன்றாக கலந்துவிடவேண்டும். அடுத்து பேக்கிங் பவுடர், சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து எலுமிச்சை பழத்தின் சாறையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இந்த கலவையை கேக் டின்னில் வெண்ணெய் தடவி அதில் சேர்த்து உங்களுக்கு ஏதுவான வகையில் குக்கர் அல்லது அவனில் பேக் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். பரிமாறும்போது ஃபிரஷ் ஸ்ட்ராபெரி பழங்களை அதன் மீது வைத்து பரிமாற வேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்