தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எலும்பை இரும்பாக்குவதும்; துரும்பாக்குவதும் நம் கையில்தான் உள்ளது! வலுவாக்கம் வழிகள் இதோ!

எலும்பை இரும்பாக்குவதும்; துரும்பாக்குவதும் நம் கையில்தான் உள்ளது! வலுவாக்கம் வழிகள் இதோ!

Priyadarshini R HT Tamil

Oct 22, 2024, 10:15 AM IST

google News
எலும்பை இரும்பாக்குவதும், துரும்பாக்குவதும் நம் கையில்தான் உள்ளது எனில், வலுவாக்கம் வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
எலும்பை இரும்பாக்குவதும், துரும்பாக்குவதும் நம் கையில்தான் உள்ளது எனில், வலுவாக்கம் வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

எலும்பை இரும்பாக்குவதும், துரும்பாக்குவதும் நம் கையில்தான் உள்ளது எனில், வலுவாக்கம் வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் தெரிந்தும், தெரியாமலும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பெரும்பாலானவை நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாகும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றை குறைத்துவிடுவது நல்லது. உடலில் பலமான எலும்பு மண்டலத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். சில உணவுகள் உங்கள் உடலில் உள்ள எலும்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றை தவிர்ப்பது உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட வழிவகுக்கும்.

சோடா

சர்க்கரை மற்றும் கார்பனேடட் போனங்கள், சோடா போன்றவற்றில் பாஸ்ஃபோரிக் அமிலம் உள்ளது. அது உங்கள் உடல் கால்சியம் உறிஞ்சும் திறனை குறைத்து எலும்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்கிறது.

ஆல்கஹால்

அதிகப்படியாக ஆல்கஹால் குடிப்பதும் உடலில் எலும்பு மண்டலம் உருவாவதை தடுக்கிறது. இதனால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதனால் எலும்பு ஆரோக்கியம் குறைந்து, எலும்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

அதிகப்படியாக வைட்டமின் ஏ சேர்ப்பது

உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சேர்ப்பது மிக அவசியம் ஆகும். ஆனால் அதை மாத்திரைகள் மற்றும் அசைவ உணவுகள் மூலம் உடலில் அதிகம் சேரவிடுவது ஆபத்தானது. அது உங்கள் உடலின் எலும்பு மண்டலத்தை பாதிக்கிறது.

ஆக்சலேட் உப்பு அல்லது அமிலம் நிறைந்த உணவுகள்

ஆக்சலேட் உப்பு அல்லது அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலக்கீரை, பீட் கீரைகள் உள்ளிட்டவற்றில் அதிகப்படியாக உள்ள ஆக்சலேட்கள் உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இடையூறு ஏற்படுத்தி, எலும்பு ஆரோக்கியத்தை குறைத்துவிடுகிறது. எனவே அவற்றை குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள்

சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளால் அழற்ஜி போன்ற நிலைகள் ஏற்படும். இவையும் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை.

பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்

அதிகளவு பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளையும் குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். இறைச்சி உணவுகள், கோலா போன்ற பானங்களிலும் அதிகளவு பாஸ்பரஸ் உள்ளது. இவையும் கால்சிய சமநிலையை தடுக்கிறது. அதுவும் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

அதிகப்படியான புரதம்

புரதம் உடலுக்கு தேவையான ஒரு சத்து. ஆனால் அதை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும்போது அது உயிரிழப்பு வரை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. விலங்கு புரதம், புரதச்சத்தை வழங்கும் மாத்திரைகள், பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வது சிறுநீரில் கால்சிய இழப்பை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.

உப்பு நிறைந்த உணவுகள்

உப்பு அதிகம் உள்ள சிப்ஸ், துரித உணவுகள், கேனில் அடைக்கப்பட்ட சூப்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் என அனைத்தும் கால்சியத்தின் அளவை குறைத்து, சிறுநீரில் அவற்றை வெளியேற்றி, எலும்பை வலுவிழக்கச்செய்கிறது.

காஃபைன்

மிதமான அளவு காஃபைன் உட்கொள்வதால் சில ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. அவை காஃபி, தேநீர் மற்றும் கூல் டிரிங்கில் உள்ளது. ஆனால் அதிகளவில் அவற்றை எடுத்துக்கொண்டால் அது கால்சிய இழப்பை அதிகரித்து எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி