தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மணமணக்கும் மிளகு குழம்பு! மழைக்கு இதமானது; சுவை நிறைந்தது! மசாலாப்பொடியுடன் 2 ரெசிபி பாருங்க!

மணமணக்கும் மிளகு குழம்பு! மழைக்கு இதமானது; சுவை நிறைந்தது! மசாலாப்பொடியுடன் 2 ரெசிபி பாருங்க!

Priyadarshini R HT Tamil

Oct 21, 2024, 04:05 PM IST

google News
மணமணக்கும் மிளகு குழம்பு, மழைக்கு இதமானது. சுவை நிறைந்தது. மசாலாப்பொடியுடன் 2 ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
மணமணக்கும் மிளகு குழம்பு, மழைக்கு இதமானது. சுவை நிறைந்தது. மசாலாப்பொடியுடன் 2 ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

மணமணக்கும் மிளகு குழம்பு, மழைக்கு இதமானது. சுவை நிறைந்தது. மசாலாப்பொடியுடன் 2 ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

மிளகு குழம்பு, இந்த மழைக்கு உங்கள் உடலை இதமாக வைத்துக்கொள்ள உதவும். மிளகு குழம்பை வைத்து ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக்கொள்ளலாம். இந்த மழைக்காலத்துக்கு நீங்கள் அடிக்கடி சமையலறைக்குச் சென்று அவதிப்பட தேவையில்லை. இதை மட்டும் வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள். இந்த குழம்பு மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுக்களையும் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைத்தரும். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் மழைக்கால நோய்க்கும் திறன் கொண்டவைதான். இந்த குழம்பை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதை செய்வதும் எளிதுதான். இதற்கான மசாலாவை அரைத்து நீங்கள் ஸ்டோர் செய்துகொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் கெடாது. அந்தப்பொடியை நீங்கள் வேறு குழம்பு வகைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொமல்லிவிதை – 1 ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

வரமிளகாய் – 3

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

(வெறும் கடாயை சூடாக்கி அனைத்துபொருட்களையும் சேர்த்து நன்றாக வாசத்துடன், பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை மட்டும் பொடிக்கு சேர்க்க வேண்டும். ஆறவிட்டு காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து பொடி செய்துகொள்ள வேண்டும். அதனுடன் வறுத்து வைத்துள்ள கட்டிப்பெருங்காயமும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்)

கட்டிப்பெருங்காயம் – 1

(எண்ணெய் சேர்த்து பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

கசகசா – கால் ஸ்பூன்

முந்திரி – 10

(இரண்டையும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவைக்கு பதில் தேங்காயும் கசகசாவும் சேர்த்துக்கொள்ளலாம். அதை தேர்வு செய்தால் அது இரண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்)

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்கயாம் – 2 கைப்பிடி

தக்காளி – 2

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – 1 ஸ்பூன்

புளி கரைசல் – ஒரு கப்

(எலுமிச்சை அளவு புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை வெடிக்குமளவு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் முழு சின்ன வெங்காயம் கொஞ்சம் மற்றும் நறுக்கியது கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவை நன்றாக வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் அனைத்தும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் புளிக்கரைசல், தண்ணீர், தயார் செய்து வைத்துள்ள பவுடர், கசகசா, முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

மணமணக்கும் சுவையான மிளகு குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமான சுவை கொடுக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை